Wednesday 22 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

கனடா பாராளுமன்றத்திற்குள் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலியானதாக தகவல்


ஒட்டவா, 23-10-2014,
கனடாவின் தலைநகரமான ஒட்டவாவில் அந்நாட்டின் பாராளுமன்றம் உள்ளது. நாட்டின் மையப்பகுதியில் உள்ள இந்த பாராளுமன்ற அரங்குக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் அடுத்தது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாராளுமன்றத்தில் இருந்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாரளுமன்ற வளாகத்தில் உள்ள தேசிய போர் பாதுகாப்பு நினைவக சின்னத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு வீரர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் யார் என்பது இன்னும் அடையாளம் கண்டறியப்படவில்லை. அவர் இன்னும் பாராளுமன்றத்திற்குள்ளேயே இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பாரளுமன்ற அரங்குக்குள் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போது அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அந்த வளாகத்திற்குள்தான் இருந்தாகவும் இருப்பினும் அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக அங்கிருந்து வெளியாகும் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.
                                                                                                           மேலும், . . . .

தீபாவளியன்று ஸ்ரீநகரில் பிரதமர் மோடி 


புதுடெல்லி, 23-10-2014,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி தினத்தன்று (வியாழக்கிழமை, அக்டோபர் 23) தங்கி, அவர்களின் குறைகளைக் கேட்டறிய உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, அந்த மாநில மக்களுக்கு சிறப்பு நிவாரண உதவித் திட்டத்தையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:
"தீபாவளி பண்டிகை நாளான அக்டோபர் 23-ஆம் தேதி ஸ்ரீநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நம்முடைய சகோதரிகள், சகோதரர்களுடன் நான், நாள் முழுவதும் தங்க உள்ளேன்'
                                                                                                                மேலும், ., . . .

தீபாவளிக்கு வாழ்த்து முதல்வர் தெரிவிக்காதது ஏன்?


சென்னை, 23-10-2014,
தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., சார்பில், வழக்கமாக வெளியிடப்படும் வாழ்த்துச் செய்தி, இந்த தீபாவளிக்கு வெளியாகவில்லை.
அ.தி.மு.க., சார்பில், அதன் பொதுச் செயலரும், தமிழக அரசின் சார்பில், முதல்வரும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவர். பொதுச் செயலர் மற்றும் முதல்வர் ஆகியோர், இதுவரை ஒருவராகவே இருந்ததால், ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தி மட்டும் வெளியாகும்.தற்போது, முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க., பொதுச்செயலராக ஜெயலலிதாவும் உள்ளனர். அதனால், இருவரும், தனித்தனியாக தீபாவளி வாழ்த்து செய்திகளை வெளியிடுவர் என்ற, எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இருவரிடம் இருந்தும், வாழ்த்து செய்தி வெளியாகவில்லை.
                                                                                                                           மேலும், . . . . 

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் போட்டி


திருச்சி, 23-10-2014,
'சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுப்பட்டு, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவார்' என்ற தகவலால், சீட் கிடைக்கும் என்ற ஆசையில் இருந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், 'சைலன்ட்' ஆகி விட்டனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த, 1991--96ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்காண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த செப்டம்பர், 27ம் தேதி, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
இதனால், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
                                                                                          மேலும், . . . . 

No comments:

Post a Comment