Wednesday 8 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

காஷ்மீர் எல்லையில் 50 இடங்களில் குண்டுவீச்சு பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 3 பேர் பலி இந்திய வீரர்கள் பதிலடியில் 15 பேர் கொல்லப்பட்டனர்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். இதற்கு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் 15 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு, அக்டோபர், 09-10-2014,
கடந்த 1-ந்தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளையொட்டிய இந்திய பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்திய ராணுவம் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்த போதிலும் பாகிஸ்தான் தனது வால்தனத்தை நிறுத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இடைவிடாமல் குண்டு மழை
வழக்கமாக, காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு, பூஞ்ச், கதுரா, சம்பா ஆகிய மாவட்டங்களின் அர்னியா, ஆர்.எஸ்.புரா, ஆக்னூர், கனசாக், பர்க்வால், மெந்தார், ராநகர் போன்ற பகுதிகளில்தான் இதுவரை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வந்தது.
                                                                                                         மேலும், . . . . . 

பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற முயற்சி அ.தி.மு.க. வக்கீல்கள் டெல்லி விரைந்தனர்


பெங்களூர், அக்டோபர், 09-10-2014,
பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம்கோர்ட்டில் ஜாமீன் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
வக்கீல்களுடன் ஆலோசனை
பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா கடந்த 12 நாட்களில் இதுவரை யாரையும் சந்திக்கவில்லை. இந்த நிலையில் வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், பரணிகுமார், செந்தில், திவாகர், செல்வக்குமார், அன்புக்கரசு, ஜெயராமன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக நேற்று சிறைக்குள் சென்றனர்.
இவர்களில் நவநீதகிருஷ்ணன், அசோகன், பரணிகுமார், செந்தில் உள்பட 5 பேர் மட்டுமே ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். பகல் 1 மணிக்கு உள்ளே சென்ற அவர்கள் மாலை 4.35 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தனர். ஜெயலலிதாவுடன் சுமார் 3½ மணி நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆவணங்களில் கையெழுத்து
பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு விவரங்கள், கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது பின்னர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை அவர்கள் தெரிவித்தனர்.
                                                                                                      மேலும், . . . . .

கல்பாக்கம் அணுமின்நிலைய ஊழியர் குடியிருப்பில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் சுட்டுக்கொலை சக வீரர் வெறிச்செயல்



கல்பாக்கம், அக்டோபர், 09-10-2014,
கல்பாக்கம் அணுமின்நிலைய ஊழியர் குடியிருப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர், பணியில் இருந்த சக வீரரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஊழியர்கள் குடியிருப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் அணுசக்தி துறை நிர்வாகத்தின் கீழ் அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையம், ‘பாவினி‘ ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கான குடியிருப்புக்கள் கல்பாக்கத்திலும், கல்பாக்கத்தை அடுத்த அணுபுரம் கிராமத்திலும் உள்ளன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு உள்ளனர்.
                                                                                                            மேலும், . . . . 

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மத்திய அரசு தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, அக்டோபர், 09-10-2014,
தமிழகத்தில், சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை மத்திய அரசு தலையிட்டு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருணாநிதி தலைமையில்...
சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியதையடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், தி.மு.க.தலைவர் கருணாநிதிக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே கருணாநிதி உருவப்பொம்மை எரிப்பு போராட்டங்களும் நடைபெற்றன.
இத்தகைய சூழ்நிலையில், தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தி.மு.க.தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், எஸ்.பி.சற்குண பாண்டியன், வி.பி.துரைசாமி, அமைப்புச்செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் எம்.பி., டி.ஆர்.பாலு உள்பட நிர்வாகிகளும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 36 மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
                                                                                                 மேலும்,. . . .

No comments:

Post a Comment