Tuesday 14 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

ராமநாதபுரம் அருகே பயங்கரம் போலீஸ் நிலையத்தில் வாலிபர் சுட்டுக்கொலை

விசாரணையின்போது வாக்குவாதம் செய்ததால் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டார்
தொண்டி, அக்டோபர், 15-10-2014,
போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் வாக்குவாதம் செய்ததால், சப்- இன்ஸ்பெக்டரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மெக்கானிக் ஷாப்பில் தகராறு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்தவர் அல்லாபிச்சை. இவருடைய மகன் காட்டுவா என்கிற செய்யது (வயது21). இதே ஊரைச் சேர்ந்த முகமது அலி என்பவருக்கு சொந்தமான இரால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
நேற்று பகல் சுமார் 12 மணியளிவில் தாஸ் என்பவரது ஒர்க்ஷாப்பில் விடப்பட்டு இருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்து வருமாறு செய்யதுவை முகமது அலி அனுப்பி வைத்தார்.
                                                                                                            மேலும், . . . 

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் அமைச்சர் ரமணாவின் சகோதரர் படுகொலை மோட்டார் சைக்கிளில் தப்பிய 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு



திருவள்ளூர், அக்டோபர், 15-10-2014,
திருவள்ளூர் அருகே அமைச்சர் ரமணாவின் சகோதரர் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்துவந்த 4 பேர் இந்த கொலையை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
அமைச்சரின் சகோதரர்
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு, பாலவிகார், ஓசூரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் ரவி(வயது 38). இவர் அதே பகுதியில் இரும்பு கடை (ஹார்டுவேர்ஸ்) வைத்து வியாபாரம் செய்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு சகிலா(34) என்ற மனைவியும், பூர்ணிமா(16), யுக்தா(14) என்ற மகள்களும் உள்ளனர். பூர்ணிமா பிளஸ்-1னும், யுக்தா 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
ரவி அமைச்சர் பி.வி.ரமணாவின் சித்தப்பா மகன் ஆவார்.
                                                                                                                        மேலும், . . . . 

ஆந்திராவுக்கு ரூ.1,000 கோடி நிதி புயல் சேதத்தை நேரில் பார்வையிட்டு பிரதமர் மோடி அறிவிப்பு



விசாகப்பட்டினம், அக்டோபர், 15-10-2014,
ஆந்திர புயல் சேதத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். அப்போது ரூ.1,000 கோடி நிதியுதவி அறிவித்தார்.
ஹூட் ஹூட் புயல்
வங்க கடலில் உருவான ஹூட் ஹூட் புயல், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. பலத்த மழையும் கொட்டியது.
இதன் காரணமாக விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி மாவட்டங்கள் நிலை குலைந்து போயின. அந்த மாவட்டங்களில் 320-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த 2 லட்சத்து 48 ஆயிரத்து 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 35 ஆயிரத்து 262 பேர் வெளியேற்றப்பட்டு, 223 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
26 பேர் பலி
இந்த புயலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் மட்டுமே 15 பேர் பலியாயினர். 191 பேர் காணாமல் போய் உள்ளனர்
                                                                                                                      மேலும், . . . 

சட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மும்பை, அக்டோபர், 15-10-2014,
மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று(புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தல்
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரசாரம் மும்முரமாக நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதை தொடர்ந்து இன்று(புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 15 ஆண்டுகால காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உறவு முறிந்தது.
                                                                                                           மேலும், . . . 

No comments:

Post a Comment