Saturday 25 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

வேலூரில் பயங்கரம் சிறுவனை கொலை செய்து பீரோவுக்குள் வைத்து பூட்டிய பெண் கைது கள்ளக்காதலை கண்டித்ததால் வெறிச்செயல்




வேலூர், அக்டோபர், 26-10-2014,
கள்ளக்காதலை கண்டித்தவரின் மகனை கொலை செய்து பீரோவுக்குள் வைத்து பூட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சிறுவன் மாயம்
வேலூர் முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 30). சலவை தொழிலாளி. இவரது மனைவி சுமதி (26). இவர்களுக்கு 3 குழந்தைகள்.
இதில் 2-வது மகன் தினேஷ் (3) நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் அவனை காணவில்லை.
நீண்ட நேரமாகியும் தினேஷ் வீடு திரும்பாததால் அவனை தந்தை முரளி, பல இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், முரளியின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர்.
எதிர்வீட்டு பெண்
அப்போது போலீசாருக்கு ரகசிய போன் வந்தது. அதில் முரளிக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் பெயிண்டர் மனைவி சுமதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக போனில் பேசியவர்கள் கூறினர். அதன் பேரில் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் பெயிண்டர் வீட்டிற்கு சென்றனர். அங்கு பெயிண்டரின் மனைவி சுமதி வீட்டை பூட்டி விட்டு வெளியே அமர்ந்திருந்தார்.
அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால்,
                                                                                                             மேலும், . . .

தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதி கர்நாடக-தமிழக எல்லையில் பதற்றம் நீடிக்கிறது


மேட்டூர், அக்டோபர், 26-10-2014,
கர்நாடக-தமிழக எல்லையில் காவிரி ஆற்றில் கிடந்த தமிழக மீனவரின் உடல் மைசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டது உறுதியானது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
துப்பாக்கி சூடு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள செட்டிப்பட்டியை சேர்ந்தவர் பழனி(42), மீனவர். கடந்த 21-ந் தேதி பழனி மற்றும் 2 பேர் எல்லை அருகே கர்நாடக மாநிலத்தில் உள்ள அடிப்பாலாறு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கர்நாடக வனத்துறையினர் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. அதில் ராஜா என்பவரின் காலில் குண்டுகள் பாய்ந்தன. அவர் கிராமத்திற்கு வந்து ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், பழனி அடிப்பாலாறு காவிரி ஆற்றில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
சோதனைசாவடி சூறை
மார்பில் குண்டு காயங்களும், தலையில் வெட்டுக் காயங்களும் இருந்தன. இடது கை வெட்டப்பட்டும், ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டும் இருந்தன.
                                                                                                           மேலும், . . . 

காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நவம்பர் 25 முதல் 5 கட்ட தேர்தல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு

புதுடெல்லி, அக்டோபர், 26-10-2014,
காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் நவம்பர் 25-ந் தேதி முதல் 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
காஷ்மீர், ஜார்கண்ட்
உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையின் (87 இடங்கள்) ஆயுள் ஜனவரி 19-ந் தேதி முடிகிறது.
இதேபோன்று ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிற ஜார்கண்ட் மாநில சட்டசபையின் (81 இடங்கள்) ஆயுள் ஜனவரி 3-ந் தேதி முடிகிறது.
5 கட்ட தேர்தல்
இதையடுத்து இந்த 2 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார்.
                                                                                                                 மேலும், . . . 

பால் கொள்முதல் விலை அதிகரிப்பு எதிரொலி ஆவின் பால் லிட்டருக்கு ரூ.10 உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை, அக்டோபர், 26-10-2014,
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மனிதனுக்கு தேவைப்படும் உணவுப்பொருட்களில் முக்கியமானதாக கருதப்படுவதும், கிராமப்புற விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமான பாலை உற்பத்தி செய்வோருக்கு ஆதாய விலை கிடைக்கச் செய்தல் என்ற மக்கள் சேவையினை திறம்பட செய்து கொண்டிருக்கிறது ஆவின் நிறுவனம்.
இதை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு தரமான பால் தங்கு தடையின்றி நியாயமான விலையில் அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
                                                                                                               மேலும், . . . 

No comments:

Post a Comment