Sunday 5 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
 பால்தாக்கரே மீது மிகுந்த மரியாதை: ‘சிவசேனாவை விமர்சிக்கமாட்டேன்’ மராட்டியத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்

கோலாப்பூர், அக்டோபர், 06-10-2014,
மராட்டியத்தில் நேற்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, பால்தாக்கரே மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், எனவே சிவசேனா கட்சியை விமர்சிக்கமாட்டேன் என்றும் கூறினார்.
நரேந்திர மோடி பிரசாரம்
மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று 2-வது நாளாக சூறாவளி பிரசாரம் செய்தார். சாங்கிலி மாவட்டம் தஸ்காவ், கோலாப்பூர் தபோவன் மைதானம், கோண்டியா இந்திராகாந்தி அரங்கம் ஆகிய 3 இடங்களில் நடந்த பொதுகூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சரத்பவார் மீது தாக்கு
மராட்டியத்தின் முதல்-மந்திரியாகவும், மத்திய வேளாண் மந்திரியாகவும் சரத்பவார் பதவி வகித்தபோது மராட்டியத்துக்கு என அவர் எதுவும் செய்யவில்லை.
                                                                                          மேலும்,.....

தனியார் சொகுசு பஸ்சில் கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது

அம்பத்தூர், அக்டோபர், 06-10-2014,
தனியார் சொகுசு பஸ்சில் கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தை கொண்டு சொந்த ஊரில் கார், பங்களா என சொகுசு வாழ்க்கை நடத்தி வருவது விசாரணையில் தெரிந்தது.
சொகுசு பஸ்களில் கொள்ளை
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தனியார் சொகுசு பஸ்சில் பயணிகளிடம் பணம், நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்கு மண்டல இணை கமிஷனர் சண்முகவேல் மேற்பார்வையில் அண்ணாநகர் துணை கமிஷனர் மனோகரன், திருமங்கலம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்காணிப்பில் ஜெ.ஜெ.நகர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், முத்துக்குமார், அமீர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
                                                                                                                மேலும், . . . .

ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் எம்.எல்.ஏ. மொட்டை போட்டார்

சென்னை, அக்டோபர், 06-10-2014,
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா விடுதலைகோரி
சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
                                                                                                    மேலும், . . . .

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியதற்கு கருணாநிதி கண்டனம்

சென்னை, அக்டோபர், 06-10-2014,
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியது முறையல்ல என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- ஆக்கி விளையாட்டில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்று அபார சாதனை புரிந்திருக்கிறதே?.
பதில்:- கடந்த 2010-ம் ஆண்டு 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை வென்ற இந்திய அணி, இந்த முறை 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம் என்று 57 பதக்கங்களை மட்டுமே பெற்றிருப்பது குறைவுதான். இருந்தாலும் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
கேள்வி:- நெய்வேலியில் என்.எல்.சி.யில் தொழிலாளர்கள் போராட்டம் தொடருகிறதே?.
                                                                                  மேலும், . . .

No comments:

Post a Comment