Tuesday 28 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய விவகாரம் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ‘அனைத்து பெயர்களையும் இன்று தாக்கல் செய்ய வேண்டும்’


கருப்பு பணம் பதுக்கியது தொடர்பான வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள அனைவரது பெயர்களையும் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி, அக்டோபர், 29-10-2014,
கணக்கில் காட்டாத கருப்பு பணத்தை இந்தியர்கள் பலரும் சுவிஸ் வங்கிகள் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி உள்ளனர்.
ராம் ஜெத்மலானி வழக்கு
இந்த கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, முன்னாள் மத்திய சட்ட மந்திரியும், மூத்த வக்கீலுமான ராம் ஜெத்மலானி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
இதையடுத்து கருப்பு பணத்தை மீட்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
                                                                                                                      மேலும், . . . . 

தமிழகத்தில் பரவலாக மழை: கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் 6 இடங்களில் நிலச்சரிவு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை




சென்னை, அக்டோபர், 29-10-2014,
கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் 6 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மீண்டும் நிலச்சரிவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் மழை காரணமாக ஏற்கனவே 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் பலத்த மழை பெய்ததால் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. மீண்டும் மலைப்பாதையில் அனாதிமுடுக்கு உள்பட புதிதாக 6 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் ராட்சத பாறைகள், மரங்கள் அடித்துவரப்பட்டு சாலையே தெரியாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்து கொடைக்கானல் மலைப்பாதையில் மொத்தம் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 500 பணியாளர்கள் இவற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இனி மழை பெய்யாமல் இருந்தால் ஒரு மாதத்திற்குள் இவற்றை சீரமைக்க முடியும், மழை தொடர்ந்தால் இன்னும் தாமதமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
                                                                                                            மேலும், . . . 

சட்டவிரோத கல், மணல், கிரானைட் குவாரிகள் பற்றி விசாரணை சகாயம் நியமனத்தை எதிர்த்து மறுஆய்வு மனு தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, அக்டோபர், 29-10-2014,
சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் குவாரிகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
சட்டவிரோத குவாரிகள்
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் பல சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு சுமார் ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
                                                                                                           மேலும், . . . . 

அரியானாவில் சினிமாவை மிஞ்சிய சம்பவம் சுரங்கப்பாதை தோண்டி வங்கியில் கொள்ளையடித்த பலே ஆசாமிகள் கோடிக்கணக்கான நகை, பணத்தை அள்ளிச்சென்றனர்



சண்டிகார், அக்டோபர், 29-10-2014,
அரியானாவில் சுரங்கப்பாதை தோண்டி வங்கியில் இருந்த கோடிக்கணக்கான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
அரியானா மாநிலம் சோனேபட் மாவட்டத்துக்கு உட்பட்ட கோகனா பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஒன்று அமைந்துள்ளது. குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதால், இந்த வங்கியில் 35 ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்த வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளில் ரூ.125 கோடி அளவுக்கு பணம் உள்ளது.
                                                                                                 மேலும், . . . 

No comments:

Post a Comment