Sunday 19 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

மராட்டிய மாநிலத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை பா.ஜனதா கூட்டணி ஆட்சி அரியானாவில் தனித்து ஆட்சியை பிடித்தது

அரியானாவில் பாரதீய ஜனதா தனித்து ஆட்சியை பிடித்தது. மராட்டியத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
மும்பை, அக்டோபர், 20-10-2014,
மராட்டியம், அரியானா ஆகிய இரு மாநில சட்டசபைகளுக்கு கடந்த 15-ந் தேதி தேர்தல் நடந்தது.
5 முனை போட்டி
288 சட்டசபை தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. தேர்தலில் உடன்பாடு ஏற்படாததால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. இதேபோல் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணியும் முறிந்ததால் முக்கிய கட்சிகளின் பலத்தை பரிசோதிக்கும் களமாக இந்த சட்டசபை தேர்தல் அமைந்தது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா, சிவசேனா, ராஜ் தாக்கரேயின் மராட்டிய நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் தனித்தனியே தேர்தல் களத்தை சந்தித்ததால் 5 முனை போட்டி நிலவியது.
தேர்தலின் போது 64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
                                                                                                                 மேலும், . . . . 

உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் யாரும் ஈடுபட வேண்டாம்: மரணமடைந்த 193 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, அக்டோபர், 20-10-2014,
உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் இனி யாரும் ஈடுபட வேண்டாம் என்றும், மரணமடைந்த 193 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படுவதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
                                                                                                                மேலும், . . . . 

தமிழ்நாடு முழுவதும் பருவ மழை தீவிரம் கோவை, நெல்லை, கடலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


சென்னை, அக்டோபர், 20-10-2014,
தமிழ்நாடு முழுவதும் பருவ மழை நேற்று 4-வது நாளாக நீடித்தது. தொடர் மழை காரணமாக கோவை, நெல்லை, கடலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
பருவமழை நீடிப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று 4-வது நாளாக மழை நீடித்தது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதற்கிடையே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
                                                                                                    மேலும், . . . .

தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை ஜெயலலிதா அறிக்கை

சென்னை, அக்டோபர், 20-10-2014,
தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை. மனம் தளரப்போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொது வாழ்வு
எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளில் இருந்து உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.
‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் பேரியக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உன்னையே நீ அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்’’
                                                                                                        மேலும், . . . . 

No comments:

Post a Comment