Tuesday 30 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (01-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
 கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம் வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

சென்னை, அக்டோபர், 01-10-2014,
தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் மீது போடப்பட்டிருக்கும் வழக்கில், கைது செய்ய, போலீசார் தீவிரமாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டு கள் தண்டனை விதித்து, அவரை சிறைக்கு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் பஸ் எரிப்பு, சாலை மறியல்,
                                                                                     மேலும், . . .

கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டதால் ஜாமீன் கேட்டு ஜெயலலிதா புதிய மனு அவசர வழக்காக இன்று விசாரணை

பெங்களூர், அக்டோபர், 01-10-2014,
ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
ஜாமீன் மனு
இதையடுத்து ஜெயலலிதாவும், இதே வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள அவரது தோழி சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் ஜாமீன் மனு, அப்பீல் மனு, குற்ற தீர்ப்பை ரத்து செய்ய கோரும் மனு, தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு என 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதே போன்று சசிகலா உள்ளிட்ட மற்ற 3 பேரின் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
                                                                                                        மேலும், . . .

சென்னையில் நடிகர்கள், டைரக்டர்கள் உண்ணாவிரதம் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டம்

சென்னை, அக்டோபர், 01-10-2014,
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் படஅதிபர்கள் சென்னையில் மவுன உண்ணாவிரதம் இருந்தனர்.
போராட்டம்
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 வருட ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.
தமிழ் திரையுலகினர் நேற்று மவுன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த உண்ணாவிரதம் நடந்தது. காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. அங்கு திரையுலக முக்கிய பிரமுகர்கள் அமர மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் தர்ம தேவதைக்கு அநீதியா? என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் கட்டப்பட்டு இருந்தது. எதிரில் பெரிய உண்ணாவிரத பந்தலும் போடப்பட்டு இருந்தது. நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்கள்.
வெல்வார்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேசும்போது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்கள் உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இந்த மவுன உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம்.
                                                                                                           மேலும், . . .

பெட்ரோல் விலை லிட்டருக்கு 68 காசுகள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.1 குறைகிறது
புதுடெல்லி,அக்டோபர், 01-10-2014,
பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 68 காசுகள் குறைந்தது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலையும் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைகிறது.
கச்சா எண்ணெய் விலை சரிவு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
                                                                                                          மேலும், . . .

No comments:

Post a Comment