Monday 15 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய மின் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் கோவை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா உறுதி

புதிய மின்திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும், எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்றும் முதல்-அமைச்சர்ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.
கோவை, செப்டம்பர், 16-09-2014-
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நாளை மறுநாள் (18-ந் தேதி) இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
ஜெயலலிதா பிரசாரம்
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கணபதி ப.ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.
இதற்காக சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் மாலை 4.30 மணியளவில் கோவை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரமாண்ட பொதுக்கூட்டம்
பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு வந்தார். அங்கு அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அவர் கார் மூலம் அருகில் உள்ள கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அங்கு நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-
                                                                                                     மேலும், . . . . 

ரூ.5 லட்சம் கடனுக்கு, ரூ.57 லட்சம் கேட்டார் சென்னையில் கந்துவட்டி மன்னன் கைது பரபரப்பு தகவல்கள்

சென்னை, செப்டம்பர், 16-09-2014-
ரூ.5 லட்சம் கடனுக்கு, ரூ.57 லட்சம் கேட்டு எவர்சில்வர் பாத்திர கம்பெனி அதிபரிடம் தொல்லை கொடுத்த பிரபல கந்துவட்டி மன்னன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சண்முகம்
சென்னை காரப்பாக்கம், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் சொந்தமாக எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனி வளர்ச்சிக்காக, இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார். சென்னை புரசைவாக்கம், கரியப்பா தெருவில் வசிக்கும் காமராஜ் (வயது 39) என்ற துணிக்கடை அதிபர், இந்த கடன் தொகையை கொடுத்துள்ளார். இவர் சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை வைத்துள்ளார்.
சண்முகம் தான் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியபிறகும், காமராஜ், வட்டிக்கு வட்டி கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கோர்ட்டிலும் வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
கந்துவட்டி புகார்
இதனால், சண்முகத்தின் மகன் டில்லிராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமராஜ் மீது புகார் கொடுத்தார். புகாரில் அவர் கூறியதாவது:-
                                                                                                               மேலும், . . . .

ஆட்சிமொழி, அலுவல் மொழி என்று இந்தியை திணிக்க முற்பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் ம.தி.மு.க. மாநாட்டில் எச்சரிக்கை தீர்மானம்

சென்னை, செப்டம்பர், 16-09-2014-
ஆட்சி மொழி, அலுவல் மொழி என்று இந்தியை திணிக்க முற்பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று ம.தி.மு.க. மாநாட்டில் எச்சரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் 106-வது பிறந்த நாளையொட்டி, ம.தி.மு.க. சார்பில் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
மாநாட்டில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
காவிரி மேலாண்மை வாரியம்
* தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துவதோடு, இந்த கோரிக்கைக்காக அக்டோபர் 2-ந் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
* காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு 2007 பிப்ரவரி 5-ல் அளிக்கப்பட்டு, 2013 பிப்ரவரி 19-ல் மத்திய அரசின் அரசு இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
                                                                                                                       மேலும், . . . .

காஷ்மீரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு பிரமாண்ட குழாய்கள் மூலம் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

புதுடெல்லி, செப்டம்பர், 16-09-2014-
காஷ்மீரில் 2.26 லட்சம் மக்கள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டனர். பிரமாண்ட குழாய்கள் மூலம் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
2.26 லட்சம் பேர் மீட்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டது. இதில் 4 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவம் உள்பட பல்வேறு பேரிடர் மீட்பு அமைப்புகள் ஈடுபட்டன.
இதுவரை மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் மீட்கப்பட வேண்டியிருக்கிறது. தொடர்ந்து அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 80 போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ விமானங்கள் இதில் ஈடுபட்டுள்ளன.
வெள்ளம் வடிகிறது
மழை வெள்ளம் இப்போது வடியத்தொடங்கி உள்ளது. ஆனால் அதே சமயம் தண்ணீரால் வரக்கூடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
                                                                                                           மேலும், . . . . 

No comments:

Post a Comment