Saturday 27 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில்


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதனால் முதல்-அமைச்சர் பதவியை இழந்த அவர், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். 10 ஆண்டுகள் தேர்தலில் அவர் போட்டியிட முடியாது.
பெங்களூர், செப்டம்பர், 28-09-2014,
ஜெயலலிதா சந்தித்த பல்வேறு வழக்குகளில் சொத்து குவிப்பு வழக்கும் ஒன்றாகும்.
சொத்து குவிப்பு வழக்கு
1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்-அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு முதலில் சென்னையில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில்பெங்களூருக்கு மாற்றப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 27-ந் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தனிக்கோர்ட்டு தீர்ப்பு
ஜெயலலிதா தரப்பின் கோரிக்கையை ஏற்று, தீர்ப்பு வழங்கும் இடம் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறை வளாகத்துக்கு மாற்றப்பட்டது. இதற்காக அங்கு தற்காலிகமாக தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்படுவதை யொட்டி அந்த பகுதி முழுவதும் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
காலை 11 மணிக்கு தனிக்கோர்ட்டு கூடியது. தீர்ப்பு கூறப்படுவதையொட்டி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தனிக் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
                                                                                                     மேலும், . . . 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று அவசர ஆலோசனை புதிய முதல்-அமைச்சரை தேர்ந்து எடுக்கிறார்கள்


சென்னை, செப்டம்பர், 28-09-2014,
ஜெயலலிதா பதவி இழந்ததால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று கூடி புதிய முதல்-அமைச்சரை தேர்ந்து எடுக்கிறார்கள்.
புதிய முதல்-அமைச்சர் தேர்வு
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் அவர் தானாகவே இழந்து விட்டார்.
ஜெயலலிதா நேற்று சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து புதிய முதல்- அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களின் அவசரக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது.
                                                                                                                         மேலும், . . . 

அ.தி.மு.க.வினர் சாலை மறியல், கல்வீச்சு சென்னையில் கடைகள் அடைப்பு-பஸ்கள் நடுவழியில் நிறுத்தம் பொதுமக்கள் கடும் பாதிப்பு


சென்னை, செப்டம்பர், 28-09-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் அ.தி.மு.க.வினர் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
கொந்தளிப்பு
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு கோர்ட்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கொந்தளித்து எழுந்தனர். சாலை மறியல், கல்வீச்சு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு, பஸ் எரிப்பு போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. சென்னையிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றன.
பகல் 1 மணிக்கு கர்நாடக போலீஸ் துறை உயர்அதிகாரிகள், தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளிடம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்போதே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்கப்போவது உறுதியாகி விட்டது. சென்னையைபொறுத்தமட்டில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சென்னை முழுவதும், போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி உத்தரவிட்டார்.
தடுக்க முடியவில்லை
ஆனால் அ.தி.மு.க.வினரின் கொந்தளிப்பை போலீசாரால் பெரும்பாலான இடங்களில் தடுத்து நிறுத்த முடியவில்லை.
                                                                                                   மேலும், . . . 

சட்டமும் நீதியும் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன சுப்ரமணியன் சாமி



சென்னை, செப்டம்பர், 28-09-2014,
ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கை, முதலில் தாக்கல் செய்தவர், பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின், சுப்ரமணியன் சாமி அளித்த பேட்டி:
செய்த தவறுக்கு
யார் மீதும், ஆதாரம் இல்லாமல், நான் குற்றம் சுமத்துவதில்லை; வழக்கு போடுவதில்லை என்பது, ஜெயலலிதா மீது நான் தாக்கல் செய்த, சொத்துக் குவிப்பு வழக்கிலும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த தீர்ப்பை கண்டு யாரும் வருத்தப்படவோ, வேதனைப்படவோ தேவையில்லை. செய்த தவறுக்குத் தான், கோர்ட் தண்டனை விதித்து இருக்கிறது.
                                                                                                  மேலும், . . .

No comments:

Post a Comment