Sunday 7 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (08-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
 காஷ்மீரில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் வெள்ளப்பகுதிகளை மோடி பார்த்தார் உடனடி நிவாரணமாக ரூ.1,000 கோடி அறிவிப்பு



மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளப்பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீருக்கு உடனடி நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
ஜம்மு, செப்டம்பர், 08-09-2014,
காஷ்மீர் மாநிலத்தில், 60 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.
வெள்ளக்காடான காஷ்மீர்
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகி உள்ளது. ஜீலம் நதியில் வெள்ளம் கரைகளை உடைத்துக்கொண்டு ஓடுகிறது. ஸ்ரீநகர் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கிறது. ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. வெள்ளத்தில் பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்படுகின்றன.
இன்னொரு பக்கம் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தத்தளித்து வருகின்றனர். மின்வினியோகம், தகவல் தொடர்பு வசதிகள் அடியோடு முடங்கிப்போய் விட்டன. 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். போக்குவரத்தும் பாதித்துள்ளது.
மீட்புப்பணி
மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
                                                                                                            மேலும், . . . . 

சென்னையில் கொட்டும் மழையில் விநாயகர் சிலை ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் 5 ஆயிரம் சிலைகள் கடலில் கரைப்பு




சென்னை, செப்டம்பர், 08-09-2014,
சென்னையில் கொட்டும் மழையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 ஆயிரம் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து கோவில்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் வழிபாடு செய்து வைக்கப்பட்டிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் முதற்கட்டமாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
சிவசேனா, விசுவ இந்து பரிஷத், இந்து மகா சபா, பாரத் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் 2-வது கட்டமாக நேற்று முன்தினம் கடலில் கரைக்கப்பட்டன.
இறுதிக்கட்டமாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சென்னை நகரின் தெரு முனைகள்,
                                                                                                          மேலும், . . . . .

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழக சிறைகளில் இருந்த 2,500 விசாரணை கைதிகள் விடுதலை சென்னையில் 850 பேர் விடுவிக்கப்பட்டனர்
சென்னை, செப்டம்பர், 08-09-2014,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறைகளில் இருந்த விசாரணை கைதிகள் 2,500-க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
2,500 பேர் விடுதலை
இந்தியா முழுவதும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை விசாரித்து, அவர்களுடைய தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய மற்றும் கிளைச் சிறைகளில் நேற்று லோக் அதாலத் முறையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உட்பட்ட சிறிய வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, 2,500-க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
                                                                                                                  மேலும், ,. . . 

உடலை புதைக்க உதவிய 2 பேர் சரண் அடைந்ததால் 6 மாதத்துக்கு முன் நடந்த வாலிபர் கொலை அம்பலத்துக்கு வந்தது எலும்புக்கூடான உடலை தோண்டி எடுத்து பரிசோதனை



கும்மிடிப்பூண்டி, செப்டம்பர், 08-09-2014,
கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை புதைக்க உதவிய 2 பேர் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்ததால் 6 மாதத்துக்கு முன் நடந்த வாலிபர் கொலை அம்பலத்துக்கு வந்தது.
6 மாதத்துக்கு முன் கொலை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 20), பட்டுபுள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (20). இருவரும் நண்பர்கள். அவர்கள் இருவரும் நேற்று கும்மிடிப்பூண்டி கிராம நிர்வாக அதிகாரி சேஷாத்திரியிடம் சரண் அடைந்தனர்.
அப்போது அவர்கள் 6 மாதத்துக்கு முன்பு நடந்த ஒரு வாலிபர் கொலையில் உடலை புதைக்கவும், தடயங்களை மறைக்கவும் உடந்தையாக இருந்ததாக அவர்கள் கூறியதால் கொலை சம்பவம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. இதனை கேட்டு திடுக்கிட்ட கிராம அதிகாரி கும்மிடிப்பூண்டி போலீசில் அவர்களை ஒப்படைத்தார்.
திருட்டு தொழில்
போலீசார் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கூறிய தகவல்கள் வருமாறு:-
                                                                                                 மேலும், . . . . 

No comments:

Post a Comment