Thursday 11 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

நடுக்கடலில் மீன்பிடித்தவர்களை இலங்கை கடற்படை சுற்றிவளைத்தது 57 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்



நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண் டிருந்த 57 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.
நாகை, செப்டம்பர், 12-09-2014,
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்குவதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
அத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், பின்னர் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் அவர்கள் விடுதலை செய்யப்படுவதுமாக இருந்து வருகிறது. மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.
நாகை மீனவர்கள்
இந்தநிலையில் நாகை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனி தெருவை சேர்ந்த வேலாயுதம் என்பவரது விசைப் படகில் பூம்புகாரை சேர்ந்த 25 மீனவர்கள் நேற்று முன்தினம் காலை
                                                                                                 மேலும், . . . . 

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கலைநயமிக்க நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் சென்னை வந்து சேர்ந்தன


சென்னை, செப்டம்பர், 12-09-2014,
தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கலைநயமிக்க நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் பாதுகாப்பாக சென்னை வந்து சேர்ந்தன. இந்த சிலைகளை 17-ந்தேதி கோர்ட்டில் ஒப்படைக்கிறார்கள்.
கலை நயமிக்க சாமி சிலைகள்
அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் இருந்து 2006-ம் ஆண்டு கலைநயம் மிக்க நடராஜர் சிலை திருட்டு போனது. சோழர் காலத்து சிலையான இது 1,050 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல கோடி மதிப்புடைய இந்த சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
அதுபோல விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருதகிரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கற்சிலை நியுசவுத் வேல்ஸ் நகரில் உள்ள கலைக் கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிலையின் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடி.
இந்த சிலைகளை சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் நியூயார்க் நகருக்கு கடத்திச் சென்று அங்கிருந்தவாறே ஆஸ்திரேலிய அரசின் அருங்காட்சியகங்களுக்கு விற்பனை செய்து உள்ளார்.
                                                                                                                    மேலும், . . . .

விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை இரண்டு வாலிபர்களை காதலித்ததால் விபரீதம்

சென்னை, செப்டம்பர், 12-09-2014,
இரண்டு வாலிபர்களுடன் கொண்ட காதல், மோதலில் முடிந்ததால் நர்சிங் மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அனிதா
சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகள் அனிதா என்ற கார்த்திகா(வயது 24). இவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 29) என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது.
இந்தநிலையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்காக சில மாதங்களுக்கு முன்பு அனிதா திருச்சி சென்றார்.
திருச்சி வாலிபரோடு காதல்
திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனிதா பயிற்சி மேற்கொண்டு இருந்தார்.
                                                                                             மேலும், . . . . 

விமானத்தை கடத்தி நாசவேலைக்கு சதி தமிழகத்தை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் உளவாளி சென்னையில் கைதானவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்


சென்னை, செப்டம்பர், 12-09-2014,
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி, போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளார். இலங்கை வழியாக தீவிரவாதிகளை ஊடூருவசெய்து, தமிழகத்தை தகர்க்க பல்வேறு நாசவேலைகளை செய்ய திட்டமிட்டு இருந்ததாக அவர் தெரிவித்தார்.
தீவிரவாத அமைப்புகள்
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் கிளை இந்தியாவிலும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் அந்த மிரட்டல் உள்ளது. இன்னொரு பக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத இயக்கமும் இந்தியாவில் கால் ஊன்ற வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளன. மேலும் கடல் வழியாக மும்பை நகருக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதுபோல, இலங்கையை தளமாக வைத்து, கடல் வழியாக தமிழகத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக, ஏற்கனவே எச்சரிக்கை தகவல்கள் வந்துள்ளன.
இதுபோன்ற தகவல்கள் உறுதியான தகவல்கள்தான் என்பதை நம்ப வைக்கும் வகையில் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இலங்கையை பாகிஸ்தான் தீவிரவாதிகள், தங்களின் தளமாக பயன்படுத்தக்கூடும் என்பதை நிரூபிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அமீர்சுபேர்சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் கையாட்களாக செயல்பட்டு, தங்களது உளவாளிகளை, தமிழகத்திற்குள் ஊடூருவ விட்டுள்ளனர்.
6 பேர் கைது
அவ்வாறு ஊடுருவிய பாகிஸ்தான் உளவாளிகள் 6 பேரை தமிழக கியூ பிரிவு போலீசாரும், தேசிய புலனாய்வு படை போலீசாரும் வேட்டையாடி ஏற்கனவே பிடித்துள்ளனர்.
                                                                                                 மேலும், . . . . 

No comments:

Post a Comment