Saturday 6 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
அமைச்சர் பதவியில் இருந்து மாதவரம் மூர்த்தி நீக்கம் ரமணா மீண்டும் அமைச்சரானார் ஜெயலலிதா முன்னிலையில் பதவி ஏற்றார்


பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி நீக்கப்பட்டு, பி.வி.ரமணா மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று அவர் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
சென்னை, செப்டம்பர், 07-09-2014,
முதல்-அமைச்சர்ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவையில் பால்வளத்துறை மற்றும் பால்பண்ணை வளர்ச்சி துறை அமைச்சராக மாதவரம் வி.மூர்த்தி இருந்து வந்தார்.
வி.மூர்த்தி நீக்கம்
திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பை யும் அவர் வகித்து வந்தார். திருவள்ளூர் மாவட்டம் கட்சி ரீதியாக கிழக்கு மற்றும் மேற்காக மாற்றி அமைக்கப்படுவதாகவும், அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து மாதவரம் வி.மூர்த்தி நீக்கப்படுவதாகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்த நிலையில், வி.மூர்த்தி நேற்று அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
புதிய அமைச்சர் பி.வி.ரமணா
அவருக்கு பதிலாக, திருவள்ளூர் சட்டசபை தொகுதி உறுப்பினர் பி.வி.ரமணா புதிய அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டார். வி.மூர்த்தி கவனித்து வந்த பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி துறை அவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
                                                                                               மேலும், . . . .

உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு: மாநில தேர்தல் ஆணையரிடம் பாரதீய ஜனதா புகார் போராட்டம் நடத்த போவதாக கம்யூனிஸ்டுகள் அறிவிப்பு

சென்னை, செப்டம்பர், 07-09-2014,
உள்ளாட்சி இடைத்தேர்தல் சம்பந்தமாக மாநில தேர்தல் ஆணையரிடம் பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. போராட்டம் நடத்தப்போவதாக கம்யூனிஸ்டுகள் அறிவித்து உள்ளனர்.
பா.ஜனதா
தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் மாநில தேர்தல் அதிகாரி அய்யரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                 மேலும், . . . 

செங்கோட்டையில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி

செங்கோட்டை, செப்டம்பர், 07-09-2014,
செங்கோட்டையில் நகர சபைக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை இடித்த போது, கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்து அமுக்கியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
கட்டிடம் இடிப்பு
நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகரசபை அலுவலகம் அருகே நகரசபைக்கு சொந்தமான 2 வணிக வளாகங்கள் உள்ளன. அதில் தரைதளத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இருந்தன. அவற்றின் முதல் மாடியில் தங்கும் விடுதி இருந்தது.
2 வணிக வளாகத்தின் மாடி கட்டிடங்களும் மிகவும் சேதம் அடைந்து இருந்ததால், அதை இடித்து அப்புறப்படுத்த நகரசபை நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்த பணிகள் தொடங்கின.
ஒரு வணிக வளாகத்தில் இடிக்கும் பணி முடிவடைந்து விட்டது.
                                                                                                             மேலும், . . . .

வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகளை கடத்திய வாலிபர் கைது பரபரப்பு தகவல்


கரூர், செப்டம்பர், 07-09-2014,
வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிகள்
கரூர் கீரைகாரத்தெருவை சேர்ந்தவர் ராஜு (வயது 30). சிமெண்டு குழாய் விற்பனை நிறுவனம் வைத்துள்ளார். இவரது மனைவி மஞ்சு. இவர்களது குழந்தை அக்சயா (3½). அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (32). டெய்லர். இவரது மனைவி வசந்தி. இவர்களது குழந்தை கீர்த்தனா (3½). சிறுமிகள் 2 பேரும் கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சிறுமிகள் 2 பேரும் மதியம் 3 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர்.
கடத்தல்
சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தைகளின் பெற்றோர் வந்து பார்த்த போது, வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் இரண்டு பேரையும் காணவில்லை.
                                                                                               மேலும், . .. .

No comments:

Post a Comment