Tuesday 9 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

பிரதமர் பதவி ஏற்ற பிறகு மோடி முதல் முறையாக அமெரிக்கா பயணம் ஒபாமாவுடன் 29-ந் தேதி சந்திப்பு இருதரப்பு உறவு பற்றி முக்கிய பேச்சுவார்த்தை
பிரதமர் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா செல்லும் நரேந்திர மோடி 29-ந் தேதி ஒபாமாவை சந்தித்து பேசுகிறார்.
வாஷிங்டன், செப்டம்பர், 10-09-2014,
நரேந்திர மோடி கடந்த மே மாதம் 26-ந் தேதி பிரதமராக பதவி ஏற்ற பிறகு, உலக நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முக்கியத்துவம் வாய்ந்தது
அந்த வகையில் அவர் பூடான், பிரேசில், நேபாளம், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அடுத்து அவர் அமெரிக்கசுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது.
ஏனெனில், குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பை தொடர்ந்து நடந்த இனக்கலவரங்களை, அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி அடக்க தவறிவிட்டார் என குற்றம் சாட்டி, அவருடைய விசாவை அமெரிக்கா கடந்த 2005-ம் ஆண்டு ரத்து செய்து விட்டது. அதன்பிறகு மோடி, அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை.
ஒபாமா அழைப்பு
இந்த நிலையில், பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து காட்சிகள் மாறின.
                                                                                                                    மேலும், . . . . 

சென்னையில் மாநில கல்லூரியில் பயங்கரம்: மாணவர்கள் வீச்சரிவாளுடன் மோதல் பலத்த காயத்துடன் 2 மாணவர்கள் சிகிச்சை


சென்னை, செப்டம்பர், 10-09-2014,
சென்னை மாநில கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் வீச்சரிவாளுடன் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அரிவாள் வெட்டில் 2 மாணவர்கள் காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
முன்விரோதம்
சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு உள்ளேயும், வெளியேயும் அடிக்கடி கோஷ்டி மோதலில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.
மாணவர் பேரவை தேர்தலுக்கு பிறகு, பெரம்பூர், வியாசர்பாடி பகுதிகளில் இருந்து 29-ஏ மாநகர பஸ்சில் கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கும், ராயபுரம் காசிமேடு பகுதியில் இருந்து 6-டி மாநகர பஸ்சில் பயணித்து கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
29-ஏ பஸ்சில் வரும் மாணவர்கள் குழுவினர் தான், கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டினார்கள். 6-டி பஸ்சில் பயணித்த மாணவர்கள் குழுவினர் மாணவர் பேரவை தேர்தலில் தோல்வியை தழுவினார்கள். தோல்வியால் அவர்கள் அடிக்கடி 29-ஏ பஸ் மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.
அரிவாளுடன் மோதல்
நேற்று பகல் 12 மணியளவில் கல்லூரி தாவரவியல் துறை அருகே 6-டி பஸ்சில் வரும் மாணவர் குழுவினர்,
                                                                                                        மேலும், . . .

போலீஸ் விசாரணையின் போது சித்ரவதை: கோர்ட்டு உத்தரவுப்படி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண் குணம் அடைகிறார் இன்று ஐகோர்ட்டில் ஆஜர்


சென்னை, செப்டம்பர், 10-09-2014,
உடுமலைப்பேட்டையில் போலீஸ் விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளான பெண் நீதிமன்ற உத்தரவுப்படி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணம் அடைகிறார். இன்று (புதன்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
போலீஸ் ஸ்டேஷனில்பெண் சித்ரவதை
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி (வயது 71). கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் சந்திரா (வயது 49) என்ற மகள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி சந்திரா குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் லீலாவதி படுகொலை செய்யப்பட்டார்.
                                                                                                                     மேலும், . . . .

எல்.ஐ.சி. பெண் ஏஜெண்டு கொலை வழக்கு கொலையாளிகள் 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்


சென்னை, செப்டம்பர், 10-09-2014,
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த எல்.ஐ.சி. பெண் ஏஜெண்டு கொலை வழக்கில், கொலையாளிகள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கொலை செய்தது எப்படி? என்பது பற்றி கொலையாளிகள் இருவரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
விசாலாட்சி கொலை
சென்னை எம்.ஜி.ஆர்.நகர். ஜாபர்கான்பேட்டை, கங்கா நகர், அருள் சோழன் அடுக்குமாடி குடியிருப்பில், முதல் மாடியில் வசித்தவர் விசாலாட்சி (வயது 63). எல்.ஐ.சி. ஏஜெண்டான இவர், கணவரை பிரிந்து வாழ்ந்தார். குழந்தைகள் இல்லை.
கடந்த திங்கட்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்தபோது விசாலாட்சி படுகொலை செய்யப்பட்டார்.
                                                                                                    மேலும், . . . . . 

No comments:

Post a Comment