Wednesday 10 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கி உணவு, தண்ணீர் இல்லாமல் தவிப்பு 4 லட்சம் பேரை மீட்க தீவிர நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் ராணுவ வீரர்கள் மும்முரம்





காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 4 லட்சம் பேரை மீட்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீநகர், செப்டம்பர், 11-09-2014,
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழை, மாநிலத்தை அடியோடு புரட்டி போட்டுள்ளது.
200 பேர் சாவு
இதனால் அங்குள்ள ஜீலம், தாவி, செனாப் உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் அபாய கட்டத்தை தாண்டி பல அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது.
பலத்த மழை மற்றும் ஆறுகளின் வெள்ளப்பெருக்கால் காஷ்மீரின் தெற்கு மற்றும் வட பகுதிகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. கோடை கால தலைநகரான ஸ்ரீநகரும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
பேய் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்ற வெள்ளச்சேதத்தால் ஏராளமானோரை காணவில்லை.
ரூ.1,000 கோடி நிதி
காஷ்மீர் வெள்ளப்பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்த்தார். அதை தேசிய பேரழிவாக அறிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு ரூ.1,000 கோடி நிதி உதவி அறிவித்தார்.
                                                                                                      மேலும், . . . . 

எனக்கும் கருணாநிதிக்கும் இடையே பிளவை உருவாக்க முடியாது மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, செப்டம்பர், 11-09-2014,
எனக்கும், கருணாநிதிக்கும் இடையே பிளவை உருவாக்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இது குறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாழ்த்தி அனுப்பினார்
தமிழகத்தின் மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. தொண்டர்களையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும், தி.மு.க.விற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது செயல்படும் முன்னோடிகளையும் தனித்தனியே சந்தித்து பேட்டி காணும் நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி, இதுவரை 12 மாவட்டங்களை முடித்துள்ளேன்.
இந்த நிகழ்ச்சிகள் பற்றி தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கும் தெரிவித்து, அவர்களது ஆலோசனைகளையும் பெற்றுள்ளேன்.
                                                                                                      மேலும், . . . .  

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணை போலீஸ் காவலில் கொடூரமாக சித்ரவதை என்பது அப்பட்டமான பொய் ஐகோர்ட்டில், இன்ஸ்பெக்டர் பதில்மனு தாக்கல்


சென்னை, செப்டம்பர், 11-09-2014,
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணை போலீஸ் காவலில் வைத்து கொடூரமாக சித்ரவதை செய்ததாக கூறுவது அப்பட்டமான பொய் என்று ஐகோர்ட்டில் உடுமலைப்பேட்டை இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அரை நிர்வாணம்
மதுரை, மேலூரை சேர்ந்தவர் பி.ராஜகுமாரி (வயது 26). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய தாயார் சந்திரா உடுமலைப்பேட்டையில் தங்கியிருந்து ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அவர் வசித்த வீட்டில் உரிமையாளர் லீலாவதியை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து உடுமலைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, என் தாயாரை கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி பிடித்து சென்று, கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர். அவரை அரை நிர்வாணப்படுத்தி, தலைகீழாக தொங்க விட்டு, அடித்து உதைத்துள்ளனர். கை விரல்கள் நகங்களின் இடுக்கில் ஊசியை வைத்து குத்தி சித்ரவதை செய்துள்ளனர். பின்னர், என் தாயாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர். எனவே, இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
நீதிபதி உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சந்திராவை நேரில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 5-ந் தேதி நீதிபதி முன்பு சந்திரா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியில் சந்திராவை சிகிச்சைக்காக சேர்க்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை தன்னுடைய அறையில் வைத்து நீதிபதி விசாரித்தார். அப்போது சந்திராவுக்கு சிகிச்சை வழங்கிய டாக்டர்கள் தங்களது அறிக்கையை முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர்.
அடிப்படை ஆதாரமற்றது
இந்த வழக்கில் உடுமலைப்பேட்டை இன்ஸ்பெக்டர் எ.தவமணி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
                                                                                                   மேலும், . . . 

முன்விரோதத்தில் அண்ணன்-தம்பியை வெட்டிய தந்தை-மகன் பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்


செங்குன்றம், செப்டம்பர், 11-09-2014,
செங்குன்றம் அருகே முன்விரோதத்தில் அண்ணன் தம்பியை, ரவுடியும், அவரது தந்தையும் அரிவாளால் ஓட, ஓட விரட்டி வெட்டினர். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தந்தையையும், மகனையும் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல ரவுடி
சென்னை வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர் ரவி (வயது 50). மனைவி பெயர் விஜயலட்சுமி (40). இவர்களுடைய மகன் ஜெகன் (18). கொருக்குப்பேட்டை சுடுகாட்டில் வேலை பார்த்து வந்தார். ஜெகன் மீது பல்வேறு வழிப்பறி கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகள் வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. பழைய குற்றவாளி என்பதால் போலீசார் அடிக்கடி இவரை கண்காணித்து வந்தனர்.
போலீசார் தன்னை கண்காணிப்பதை அறிந்த ஜெகன், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தாய், தந்தையுடன் செங்குன்றத்தை அடுத்த அலமாதி நேதாஜிநகர் பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இங்கும் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்வது, வாலிபர்களுக்கு மது அருந்தும் பழக்கத்தை கற்றுக்கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
                                                                                                                மேலும், . . . . 

No comments:

Post a Comment