Sunday 21 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

உள்ளாட்சி இடைத் தேர்தல் முடிவுகள் - அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க வெற்றி
இணையதளத்தில் விளம்பரம் செய்து முறைகேடு கார் மோசடி கும்பல் தலைவனுக்கு வலைவீச்சு விமானத்தில் தப்பி ஓட்டம்

சென்னை, செப்டம்பர், 22-09-2014,
இணையதளத்தில் விளம்பரம் செய்து, வாடகை தருவதாக கார்களை வாங்கி, அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ள கார் மோசடி கும்பலின் தலைவனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாடகை தருவதாக மோசடி
சென்னை ஜெ.ஜெ.நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சென்னை கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், நான் இணையதளத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்தேன்.
அந்த விளம்பரத்தில், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், தங்கள் கார்களை எங்களிடம் ஒப்படைத்தால், மாதம் கணிசமான தொகையை வாடகையாக தருவோம்,
                                                                                              மேலும், . . . .

தர்மபுரி அருகே பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி சாலை தடுப்பை உடைத்துக் கொண்டு ஓடிய கார், லாரி மீது மோதியது

தர்மபுரி, செப்டம்பர், 22-09-2014,
தர்மபுரி அருகே சாலை தடுப்பை உடைத்துக் கொண்டு ஓடிய கார், லாரி மீது மோதிய பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
நகைக்கடை மேலாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாதம்பதி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 31), அவரது மனைவி நித்யா (25). இந்த தம்பதிக்கு கிரிஜா (6), விஷால் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் நகைக்கடை ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் விஜயகுமாரின் தம்பி முனிராஜின் மனைவிக்கு நேற்று முன்தினம் இரவு தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது.
                                                                                                      மேலும், . . . .

‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசிய நூற்றாண்டு விழா குமரிஅனந்தன், செண்பகராமன் குடும்பத்தினர் பங்கேற்பு

சென்னை, செப்டம்பர், 22-09-2014,
சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசிய 100-வது ஆண்டு விழாவில் குமரிஅனந்தன், செண்பகராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
100 ஆண்டுகள் நிறைவு
முதலாம் உலகப்போரின்போது, ஜெர்மனி நாட்டின் ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி தாக்குதல் நடத்திய 100-வது ஆண்டு இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனையொட்டி அதன் நூற்றாண்டு நிறைவு விழாவும், அந்த கப்பலில் வந்த தமிழக வீரர் செண்பகராமனின் 123-வது பிறந்தநாள் விழாவும் சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயக்குனர் ஜெ.டி.சர்மா, கம்பத், வெங்கட் ராஜூலு, சிங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவுக்கு செண்பகராமனின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து அவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
‘ஜெய்ந்த்’ என்று கூறியவர்
விழாவில் குமரிஅனந்தன் பேசியதாவது:-
                                                                                                              மேலும், . . . . .

தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர் இந்திய மருத்துவ சங்க தலைவர் பேட்டி

நாமக்கல், செப்டம்பர், 22-09-2014,
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக இந்திய மருத்துவ சங்க தலைவர் கூறினார்.
கவுன்சில் கூட்டம்
இந்திய மருத்துவ சங்கத்தின் 280-வது கவுன்சில் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் (தேர்வு) சுரேந்திரன், செயலாளர் ராஜா, பொருளாளர் மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                               மேலும், . . . .

No comments:

Post a Comment