Monday 8 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

நெல்லை மேயர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் திடீர் வாபஸ்: அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு 4 நகராட்சி தலைவர் பதவியையும் அ.தி.மு.க. கைப்பற்றியது

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் வாபஸ் பெற்றதால் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 4 நகராட்சி தலைவர் பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.
நெல்லை, செப்டம்பர், 09-09-2014,
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலி இடங் களை நிரப்புவதற்காக தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

நெல்லை, தூத்துக்குடி, கோவை மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், அரக்கோணம், விருத்தாசலம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொடைக்கானல், குன்னூர், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிகளுக்கும் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார்.
மாநகராட்சி, நகராட்சி வார்டுகள் உள்பட பஞ்சாயத்துகளில் காலியாக உள்ள இடங்களிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க - பா.ஜனதா போட்டி
இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வும், பாரதீய ஜனதா கட்சியும் மட்டுமே பிரதானமாக களத்தில் இருக்கின்றன.
பா.ஜனதா கட்சிக்கு அதன் கூட்டணி கட்சிகளான தே.மு. தி.க, பா.ம.க, ம.தி.மு.க போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன.
                                                                                                       மேலும், . . . .

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் மிரட்டலுக்கு பயந்தே பா.ஜ.க. வேட்பாளர் வாபஸ் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

சென்னை, செப்டம்பர், 09-09-2014,
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில், மிரட்டலுக்கு பயந்தே பா.ஜ.க. வேட்பாளர் வெள்ளையம்மாள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார் என்று அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருநெல்வேலி மாநகராட்சி பா.ஜ.க. மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள், தனது வேட்புமனுவை திடீரென வாபஸ் பெற்றது குறித்து, அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மிரட்டல்
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிட தயங்கிய நிலையில் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் பா.ஜ.க. களத்தில் நிற்கின்றது. ஆனால், பல இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிடக்கூடாது என்று மிரட்டப்பட்டும், தாக்குதலுக்கு உள்ளாகியும் வருகின்றனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தால் மனுக்களை வாங்க மறுக்கின்றனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி பா.ஜ.க. மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் கடந்த 3 நாட்களாக மிரட்டப்பட்டு வந்தார்.
                                                                                                                    மேலும், . . . . 

வளசரவாக்கத்தில் 2 தனியார் பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய மர்ம நபருக்கு வலைவீச்சு


பூந்தமல்லி, செப்டம்பர், 09-09-2014,
வளசரவாக்கம் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன்
சென்னை வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் பகுதியில் வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இதேபோல் வளசரவாக்கம் நியூ காலனி, 1-வது தெருவில் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளிக்கூடம் உள்ளது. எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக்கூடங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
விடுமுறை முடிந்து நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தனர். காலை சுமார் 8.30 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போன் மூலம் பேசினார்.
வெடிகுண்டு மிரட்டல்
அவர், ‘வளசரவாக்கம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா மற்றும் செயின்ட் ஜான்ஸ் பள்ளிக்கூடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும்.
                                                                                               மேலும், . . . . 

டெல்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு பாரதீய ஜனதா ரூ.4 கோடி பேரம்? வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
புதுடெல்லி, செப்டம்பர், 09-09-2014,
டெல்லியில் ஆட்சி அமைப்பதற்காக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு பாரதீய ஜனதா ரூ.4 கோடி கொடுக்க முன்வந்ததாக கூறி, அதுபற்றிய வீடியோ ஆதாரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார்.
குதிரை பேரம் குற்றச்சாட்டு
டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. என்றாலும் அங்கு சட்டசபை கலைக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கு தனிப்பட்ட முறையில் பெரிய கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பி உள்ளார்.
ஆனால் இதற்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பாரதீய ஜனதா இன்று (செவ்வாய்க்கிழமை) கூடி முடிவு செய்ய இருக்கும் நிலையில்,
                                                                                                        மேலும், . . . . . 

No comments:

Post a Comment