Thursday 4 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

இந்தியாவில் அல்கொய்தா கிளை தொடங்கப்பட்டதாக தகவல் மாநிலங்களில் உஷார் நடவடிக்கை மத்திய அரசு அவசர ஆலோசனை
இந்தியாவில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பால் கிளை தொடங்கப்பட்டதாக தகவல் வெளியானதால் மத்திய அரசு அவசர ஆலோசனை மேற்கொண்டது. மாநில அரசுகளையும் உஷார் படுத்தி இருக்கிறது.
புதுடெல்லி, செப்டம்பர், 05-09-2014,
அமெரிக்காவில் 2001, செப்டம்பர், 11-ந்தேதி அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி உலகையே பதற்றத்தில் ஆழ்த்திய தீவிரவாத இயக்கம் அல் கொய்தா.
இந்தியாவில்தீவிரவாத இயக்கம்
3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட அந்த தாக்குதலின்போது, அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தவர், சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன். அவர் பாகிஸ்தானில், அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கி இருந்தபோது, 2011-ம் ஆண்டு, மே 2-ந்தேதி அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு வந்தவர், அய்மான் அல் ஜவாரி (வயது 63).
இவர், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின், இந்திய கிளை தொடங்கப்பட்டுள்ளதாக பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது பேச்சு அடங்கிய 55 நிமிடம் ஓடுகிற வீடியோ யு டியுப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-
அல் கொய்தா இயக்கத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இது இந்திய துணைக்கண்டத்தில் காயிதத் அல் - ஜிஹாத் என்று அழைக்கப்படும்.
                                                                                                              மேலும், . . . 

சுப்ரீம் கோர்ட்டு வகுத்த வழிமுறையின்படி முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முயற்சிப்பேன் கேரள கவர்னராக இன்று பதவி ஏற்க இருக்கும் நீதிபதி பி.சதாசிவம் பேட்டி
ஆலந்தூர், செப்டம்பர், 05-09-2014,
சுப்ரீம் கோர்ட்டு வகுத்த வழிமுறையின்படி, முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முயற்சிப்பேன் என கேரள மாநில கவர்னராக இன்று பதவி ஏற்க இருக்கும் நீதிபதி பி.சதாசிவம் கூறினார்.
நீதிபதி பி.சதாசிவம் இன்று பதவி ஏற்பு
சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியான பி.சதாசிவம், கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) கேரள கவர்னராக பதவி ஏற்றுக் கொள்கிறார். இதற்காக நேற்று மாலை அவர் கோவையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னை வந்த நீதிபதி பி.சதாசிவம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                        மேலும், . . . . 

உள்கட்சி அமைப்பு தேர்தலில் தி.மு.க. தலைமை ஒருதலைப்பட்சமாக நிச்சயம் நடந்து கொள்ளாது தொண்டர்களுக்கு, கருணாநிதி விளக்கம்

சென்னை, செப்டம்பர், 05-09-2014,
உள்கட்சி அமைப்பு தேர்தலில் தி.மு.க. தலைமை எந்தச்சூழ்நிலையிலும் யாருக்கும் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நிச்சயம் நடந்து கொள்ளாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உள்கட்சி தேர்தல்
தி.மு.க. 14-வது அமைப்புத்தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. தி.மு.க.வின் இந்த 14-வது அமைப்புத்தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 36 ஆயிரத்து 744. ஊராட்சி தி.மு.க. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நான்கு கட்டங்களாகவும், பேரூர் தி.மு.க.தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நான்கு கட்டங்களாகவும் செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது ஒன்றிய, நகர தி.மு.க. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தி.மு.க. தலைமை சொல்கின்ற ஆணையாளர்கள், தாங்கள் தி.மு.க. தலைமைக்கு நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து கடமையாற்றிடுவதோடு,
                                                                                                 மேலும், . . . . 

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டூழியம் 2 லாரி குண்டுகள் வெடிப்பு 18 பேர் உடல் சிதறி பலி

காபூல், செப்டம்பர், 05-09-2014,
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் சக்திவாய்ந்த 2 லாரி குண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் சிக்கி 18 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
லாரி குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தானில் காஜ்னி மாகாணத்தின் தலைநகரான காஜ்னியில் உளவுத்துறை, போலீஸ் அலுவலகங்கள் எல்லாம் ஒரே வளாகத்தில் இயங்கி வந்தன. இந்த வளாகத்துக்கு வெளியே தலீபான் தீவிரவாதிகள் நேற்று சக்தி வாய்ந்த 2 லாரி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். அப்போது விண்ணைப் பிளப்பது போல பயங்கர சத்தம் கேட்டது. பெரிய ராட்சத பள்ளம் ஏற்பட்டது. தீப்பற்றி எரிந்தது. கட்டிடங்களின் கூரைகள், ஜன்னல்கள் இடிந்து விழுந்தன.
18 பேர் உயிரிழப்பு
இந்த குண்டுவெடிப்பில் சிக்கி குறைந்தது 18 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 150 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போலீசார் ஆவார்கள்.
                                                                                                   மேலும், . . . 

No comments:

Post a Comment