Thursday 4 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
 வெயிட்டேஜ் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை, செப்டம்பர், 04-09-2014,
தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது.
வெயிட்டேஜ் முறை
ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது. இந்த வெயிட்டேஜ் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
                                                                                                            மேலும், . . .

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் பரபரப்பான பயணம் மூலம் பெங்களூரில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட இதயம் சென்னை ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது



சென்னை, செப்டம்பர், 04-09-2014,
பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இங்குள்ள நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
மூளைச்சாவு
கர்நாடக மாநில எல்லையில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் கடந்த 1-ந் தேதி ஓசூர் மெயின் ரோட்டில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் கெங்கேரியில் உள்ள பி.ஜி.எஸ். குளோபல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் அவரது உடல்நிலை மோசமாகி மூளைச்சாவு அடைந்தார்.
இதயம் தானம்
இந்த தகவல் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட அவர்கள் கதறி அழுதனர்.
                                                                                                       மேலும், . . . 

உள்ளாட்சி மன்ற தேர்தலில் 9 கட்சிகள் போட்டி இல்லை அ.தி.மு.க-பா.ஜனதா நேரடி போட்டி 18-ந் தேதி ஓட்டுப்பதிவு

சென்னை, செப்டம்பர், 04-09-2014,
உள்ளாட்சி இடைத்தேர்தலை 9 கட்சிகள் புறக்கணிப்பதால் அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சிகள் இடையே முக்கிய போட்டி ஏற்பட்டுள்ளது.
காலியான பதவிகள்
தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிகள் காலியாக உள்ளன. அரக்கோணம், விருத்தாசலம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொடைக்கானல், குன்னூர், சங்கரன்கோவில் ஆகிய 8 நகராட்சி தலைவர் பதவிகளும் காலியாக இருக்கின்றன.
இதேபோன்று 12 மாநகராட்சி உறுப்பினர், 53 நகரசபை உறுப்பினர், 7 பேரூராட்சி தலைவர், 101 பேரூராட்சி உறுப்பினர், 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 82 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன.
                                                                                            மேலும், . . . .  

பொறாமையால் எனக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக தலைவர்கள் முயற்சி செய்யவில்லை சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு
புதுடெல்லி, செப்டம்பர், 04-09-2014,
பொறாமையால் தனக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக தலைவர்கள் முயற்சி செய்யவில்லை என்றும் சுப்பிரமணியசாமி கூறினார்.
பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி டெல்லியில் நேற்று நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
சர்ச்சை
நிருபர் கேள்வி:- சமீபத்தில் டி.வி.க்கு அளித்த பேட்டியில், தமிழக மீனவர்கள் விவகாரம் பற்றி நீங்கள் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறதே?
                                                                                                         மேலும், . . . . 


விபசார வழக்கில் சிக்கிய தேசிய விருது பெற்ற நடிகை பண நெருக்கடியால் விபசாரத்தில் தள்ளப்பட்டதாக கண்ணீர் பேட்டி



ஐதராபாத், செப்டம்பர், 04-09-2014,
விபசாரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கானா போலீசிடம் சிக்கியவர் பிரபல இந்தி நடிகை ஸ்வேதா பாசு என்பது தெரிய வந்துள்ளது. இவர் தேசிய விருது பெற்ற நடிகையும் ஆவார்.
நடிகை சிக்கினார்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட அந்த நடிகையையும், அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட துணை இயக்குனர் பாலு என்பவரையும் பிடித்தனர். கைதான நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
                                                                                                      மேலும், . . . . 

No comments:

Post a Comment