Friday 26 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு பெங்களூர் தனிக்கோர்ட்டு வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

பெங்களூர், செப்டம்பர், 27-09-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் இன்று(சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதையொட்டி தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா இன்று ஆஜர் ஆவதால் கோர்ட்டு வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு
கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு விசாரணையை சென்னையில் அமைக்கப்பட்ட தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.
கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இறுதி வாதம் தொடங்கியது
இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா முன்னிலையில் இறுதி வாதத்தை முதலில் தொடங்கிய ஜெயலலிதா வக்கீல் குமார் 25 நாட்கள் வாதிட்டு பல்வேறு முக்கியமான தகவல்களை, விவரங்களை எடுத்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து சசிகலா வக்கீல் மணிசங்கர் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல் அமித் தேசாய் 8 நாட்களும் வாதிட்டனர். அரசு வக்கீல் பவானிசிங் 9 நாட்கள் வாதிட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதியுடன் இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து செப்டம்பர் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா அறிவித்தார்.
                                                                                                  மேலும், . . . .  

விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு பற்றிய விசாரணை வைகோ ஆஜராகி வாதம்

சென்னை, செப்டம்பர், 27-09-2014,
சென்னையில் நடைபெற்ற விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு பற்றிய விசாரணையில், வைகோ ஆஜராகி வாதிட்டார்.
விடுதலைப்புலிகள்
இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு 1992-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்தவேளையில், கடந்த ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு என நீடித்து சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தம் கடந்த மே மாதம் 14-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தநிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தில் தன்னையும் விசாரணையில் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
                                                                                                          மேலும், . . . . 

தேசியவாத காங்கிரஸ் ஆதரவு வாபஸ் எதிரொலி மராட்டிய முதல்-மந்திரி ராஜினாமா ஜனாதிபதி ஆட்சி அமல் ஆகுமா?

மும்பை, செப்டம்பர், 27-09-2014,
மராட்டியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றதை தொடர்ந்து, முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் ராஜினாமா செய்தார். இதனால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் ஆகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
கூட்டணி முறிந்தது
மராட்டிய சட்டசபை தேர்தல் அக்டோபர் 15-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கூட்டணி அரசை நடத்தி வந்த ஆளும் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மீண்டும் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தியது.
                                                                                                                    மேலும், . . . 

புதிய வீடு கட்டுபவர்கள் 750 மூட்டை வாங்கலாம் சலுகை விலையாக மூட்டை ஒன்றுக்கு ரூ.190 விலையில் அம்மா சிமெண்டு ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாட்டில் சலுகை விலையில், மூட்டை ஒன்றுக்கு ரூ.190 விலையில் அம்மா சிமெண்டு விற்பனைக்கு வருவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தின் கீழ், புதிதாக வீடு கட்டுபவர்கள் அதிகபட்சமாக 750 சிமெண்டு மூட்டைகள் வரை சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
சென்னை, செப்டம்பர், 27-09-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மலிவு விலையில்அத்தியாவசிய பொருட்கள்
ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும், ஏழைகளின் கனவுகள் நனவாக வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில், அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர் திட்டம், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா மருந்தகங்கள் என பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது எனது தலைமையிலான அரசு.
சிமெண்டு
இந்த வரிசையில், வீடு கட்டும் பொருட்களில் முக்கியமானதாக விளங்கும் சிமெண்டினை குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தேன்.
                                                                                                                      மேலும், . . . . 

No comments:

Post a Comment