Wednesday 17 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 மேயர் உள்பட 530 பதவிகளுக்கு இன்று உள்ளாட்சி இடைத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 மேயர் உள்பட 530 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
சென்னை, செப்டம்பர், 18-09-2014,
கோவை, தூத்துக் குடி மாநகர மேயர் பதவிகள் காலியாக இருக்கிறது.
இது போல 4 நகராட்சி தலைவர் பதவிகள், 8 மாநகராட்சி உறுப்பினர் பதவிகள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 39 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்பட தமிழகத்தில் 530 பதவி இடங்கள் காலியாக இருக்கின்றன.
இடைத்தேர்தல்
தமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் 530 பதவிகளுக்கும் இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகள்
                                                                                                   மேலும், . . . .

கோவை மேயர் தேர்தல்: அ.தி.மு.க-பா.ஜனதா மோதல் வேட்பாளர் காயம் கார் கண்ணாடிகள் உடைப்பு


கோவை, செப்டம்பர், 18-09-2014,
கோவை மேயர் தேர்தலையொட்டி அ.தி.மு.க-பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் பா.ஜனதா வேட்பாளருக்கு காயம் ஏற்பட்டது. கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
மேயர் தேர்தல்
கோவை மாநகராட்சி மேயருக்கான இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், பா.ஜனதா சார்பில் நந்தகுமார் உள்பட 16 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று நடைபெறும் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிரசாரம் முடிந்ததும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
                                                                                                 மேலும், . . . . 

நீலாங்கரையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளித்து தற்கொலை


ஆலந்தூர், செப்டம்பர், 18-09-2014,
நீலாங்கரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
டிரைவர்
சென்னையை அடுத்த நீலாங்கரை செங்கேணியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் முதல் தளத்தில் வாடகைக்கு வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருடைய மனைவி மலர் (32). இவர்களது மகள்கள் ஹரிணி (7), பரணி (3). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஹரிணி 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
வெங்கடேசன், சென்னை பாலவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
உடல் கருகி கிடந்தனர்
நேற்று அதிகாலை வெங்கடேசன் வீட்டில் இருந்து கரும்புகை வந்தது.
                                                                                                             மேலும், . . . . 

டெல்லி விமான நிலையத்தில் 5½ மணி நேரம் விசாரணை “வெளிநாடு செல்ல எனக்கு அனுமதி மறுத்தது மனித உரிமை மீறல்” கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக உதயகுமார் பேட்டி

நெல்லை, செப்டம்பர், 18-09-2014,
“வெளிநாடு செல்ல எனக்கு அனுமதி மறுத்தது, மனித உரிமை மீறல் ஆகும். அதுபற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவேன்” என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
உதயகுமாருக்கு அனுமதி மறுப்பு
நேபாள தலைநகர் காட்மாண்டுவில், மனித உரிமை மீறல் குறித்த மாநாடு நடந்து வருகிறது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து காட்மாண்டு செல்ல இருந்தார். ஆனால், அவர் வெளிநாடு செல்ல டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.
“உரிய உத்தரவு இன்றி இனி வெளிநாடு செல்ல முயற்சிக்க வேண்டாம்” என்று அதிகாரிகள் அவரிடம் அறிவுறுத்தியதாக தெரியவருகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கூடங்குளம் போராட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி உதயகுமார் நிருபரிடம் கூறியதாவது:-
                                                                                                          மேலும், . . . 

No comments:

Post a Comment