Thursday 25 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு பெங்களூர் தனிக்கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் செல்ல தடை

பெங்களூர், செப்டம்பர், 26-09-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாளை தனிக்கோர்ட்டில் ஆஜராவதையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
நாளை தீர்ப்பு
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்துகுவிப்பு வழக்கில் நாளை(சனிக்கிழமை) தீர்ப்பு கூறப்படுகிறது. அன்றைய தினம் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன், இளவரசி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக உள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி, பாதுகாப்பு கருதி தனிக்கோர்ட்டு பெங்களூர் பரப்பனஅக்ரஹாராவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தனிக்கோர்ட்டை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
                                                                                          மேலும், . . .

மராட்டிய சட்டசபை தேர்தலில் அதிரடி திருப்பம் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி முறிந்தது காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்தது
மும்பை, செப்டம்பர், 26-09-2014,
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு சிக்கல் எதிரொலியாக மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பமாக சிவசேனா- பா.ஜனதா கூட்டணி உடைந்தது. மேலும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்தது.
சட்டசபை தேர்தல்
மராட்டிய சட்டசபை தேர்தல் அக்டோபர் 15-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (சனிக்கிழமை) முடிகிறது. மராட்டியத்தில் 25 ஆண்டுகளாக கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் சிவசேனா - பா.ஜனதா கட்சிகள் இந்த சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்தன.
இதனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. இரு கட்சி தலைவர்களும் கூடி பேசி வந்தனர். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை.
இறுதி பேச்சு
இந்த நிலையில் நேற்று சிவசேனா, பா.ஜனதா தலைவர்கள் இறுதியாக கூடி பேசினார்கள்.
                                                                                      மேலும், . . . . .

ஐ.நா. மன்ற கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருணாநிதி கருப்பு சட்டை அணிந்தார் தி.மு.க. தொண்டர்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது


சென்னை, செப்டம்பர், 26-09-2014,
ஐ.நா. மன்றத்தில் பங்கேற்ற ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கருப்பு சட்டை அணிந்தார். தி.மு.க. தொண்டர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
கருப்பு சட்டை
இலங்கை அதிபர் ராஜபக்சே ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து, ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 25-ந் தேதி அன்று அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்தும், கருப்பு சட்டை அணிந்தும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி நேற்று காலை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டு வாசலில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
                                                                                                                    மேலும், . . . . . .

பூந்தமல்லியில் நடந்த தம்பதிகள் கொலை வழக்கில் 3 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

பூந்தமல்லி, செப்டம்பர், 26-09-2014,
பூந்தமல்லியில் வீட்டில் தனியாக இருந்த தம்பதிகள் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தனது கனவு திட்டத்தை நிறைவேற்ற கொலை செய்ததாக கைதான ஒருவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
தம்பதிகள் கொலை
பூந்தமல்லி, திருமால் நகர், 2-வது மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு(வயது 62). இவருடைய மனைவி சாந்தி(57). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன்- மனைவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி காலை பாபு வீடு நீண்டநேரம் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வீட்டின் அறையில் சாந்தியும், மாடியில் உள்ள மற்றொரு அறையில் பாபுவும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
600 பேரிடம் விசாரணை
பூந்தமல்லி போலீசார் கொலையான கணவன்- மனைவி இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
                                                                                              மேலும், . . . . 

No comments:

Post a Comment