Friday 12 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி திடுக்கிடும் தகவல் தமிழகத்தில் 20 இடங்களை தகர்க்க சதி போலீஸ் தீவிர விசாரணை

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டில் 20 இடங் களை தகர்க்க சதித்திட்டம் தீட்டி இருந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.
சென்னை, செப்டம்பர், 13-09-2014,
தமிழகத்தில் புகுந்து நாசவேலை செய்ய பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது.
உளவாளிகள் கைது
ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம், தமிழகத்தில் உளவு பார்க்க அனுப்பிய உளவாளிகள் தொடர்ந்து கைதான வண்ணம் உள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சியில் தமீம் அன்சாரி என்ற பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார்.
                                                                                                           மேலும், . . .

திருநெல்வேலி மேயர் தேர்தலில் வாபஸ் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர், ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க.வினரும் சேர்ந்தனர்


சென்னை, செப்டம்பர், 13-09-2014,
திருநெல்வேலி மேயர் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் வெள்ளையம்மாள், முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதேபோல், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க.வினரும் சேர்ந்தனர்.
இது தொடர்பாக, அ.தி.மு.க. சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பா.ஜ.க. மேயர் வேட்பாளர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க.,
                                                                                                        மேலும், . . . .

ஹாங்காங்கில் கைதானதாக கூறப்படுவது தவறு: பொட்டு அம்மான், 2009-ம் ஆண்டு போரில் கொல்லப்பட்டு விட்டார் இலங்கை ராணுவம் தகவல்

கொழும்பு, செப்டம்பர், 13-09-2014,
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், ஹாங்காங்கில் கைதானதாக கூறப்படுவது தவறு. அவர் 2009-ம் ஆண்டு, போரில் கொல்லப்பட்டு விட்டார் என்று இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். இன்டர்போல் போலீசாரால் தேடப்பட்டவர்.
ராஜீவ் கொலை வழக்கில் அவர் மீது சென்னை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
                                                                                                         மேலும், ., . . . .

வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணத்தொகை ஜெயலலிதா உத்தரவு

சென்னை, செப்டம்பர், 13-09-2014,
வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணத்தொகை வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாதிக்கப்பட்ட மக்கள்
1992-ம் ஆண்டு, தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில்
                                                                                              மேலும், . . . .

No comments:

Post a Comment