Monday 29 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

 பெங்களூர் தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா ஜாமீன் மனு கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது


பெங்களூர் தனிக்கோர்ட்டு விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
பெங்களூர், செப்டம்பர், 30-09-2014,
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.
பெங்களூர் சிறையில் ஜெயலலிதா
இதேபோல், அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
                                                                                                                  மேலும், . . . . .  

ஜெயலலிதா பதவி இழந்ததால் மாற்று ஏற்பாடு தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்பு 30 அமைச்சர்களும் கண்கலங்க பதவி ஏற்றனர்

சென்னை, செப்டம்பர், 30-09-2014,
தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்துவைத்தார். 30 அமைச்சர்களும் கண்கலங்க பதவி ஏற்றனர்.
ஜெயலலிதாவுக்கு தண்டனை
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஜெயலலிதா வகித்து வந்த முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழக்க நேரிட்டது.
இதைத்தொடர்ந்து புதிய முதல்-அமைச்சரை தேர்வு செய்ய சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
பதவி ஏற்கும் நிகழ்ச்சி
புதிய முதல்-அமைச்சர் பதவி ஏற்பு விழா சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று பகல் 1.20 மணிக்கு நடைபெற்றது.
                                                                                                             மேலும், . .  .. . . 

ஜெயலலிதாவுக்கு ஆதரவு: நடிகர்-நடிகைகள் இன்று உண்ணாவிரதம் தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து


சென்னை, செப்டம்பர், 30-09-2014,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் சென்னையில் இன்று மவுன உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள்.
எதிர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திரையுலகினரும் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
தமிழ் திரையுலகினர் சென்னை பிலிம் சேம்பர் அலுவலகத்தில் நேற்று மாலை அவசரக்கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் தலைமை தாங்கினார்.
இதில் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, பொருளாளர் ராதாகிருஷ்ணன்
                                                                                                          மேலும், . . . . 

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு எதிரொலி பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு


சென்னை, செப்டம்பர், 30-09-2014,
பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு அளித்த தீர்ப்பை அறிந்து வேதனையில் அ.தி.மு.க. தொண்டர்கள் 30 பேர் மரணம் அடைந்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் அளித்த தண்டனையை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மாநிலம் முழுவது சோகத்திற்கு உள்ளாகினர். அதில் ஒரு சில தொண்டர்கள் துக்கம் தாங்காமல் மாரடைப்பாலும், அதிர்ச்சியடைந்தும், தீக்குளித்தும், தூக்குமாட்டியும் இறந்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-
தூக்குப்போட்டு சாவு
சென்னை வளசரவாக்கம், ஏ.பி.என். பிரதாப் நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் வெங்கடேசன், தீக்குளித்து ஆபத்தான நிலையில் கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
சென்னை திருவொற்றியூர் பெரிய மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த யோவான் மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகளும், 2-ம் ஆண்டு பி.ஏ. படிக்கும் மாணவியுமான ஜோனஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் நெல்லுகுத்து காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் தூக்குமாட்டி இறந்தார்.
                                                                                                                   மேலும், . . . . . 

No comments:

Post a Comment