Monday 1 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (02-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (02-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

 சீனா மீது நரேந்திர மோடி கடும் தாக்கு ‘‘ஆக்கிரமிப்பு போக்குடன் நடந்து கொள்கிறது’’


டோக்கியோ, செப்டம்பர்,02-09-2014,
ஆக்கிரமிப்பு போக்குடன் நடந்துகொள்வதாக சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
சீனாவின் ஆக்கிரமிப்பு போக்கு
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் 4 ஆயிரம் கிலோ மீட்டர் எல்லைப்பகுதி உள்ளது. எல்லைப்பகுதி தொடர்பாக தகராறு இருந்து வரும் நிலையில், காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் அவ்வப்போது சீன ராணுவம் ஊடுருவுகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேச மாநிலத்தையும் உரிமை கொண்டாடி இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுக்க முயற்சிக்கிறது.
இதேபோல் ஒரு தீவு தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் தகராறு இருந்து வருகிறது. மேலும் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதாக கருதப்படும் தென் சீன கடலில் குறிப்பிட்ட பகுதி தனக்கு தான் சொந்தம் என்று கூறுகிறது. புருனே, மலேசியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், தைவான் நாடுகளும் அந்த பகுதிக்கு உரிமை கொண்டாடுகின்றன. இப்படியாக இந்தியாவுடன் மட்டுமின்றி பிற நாடுகளுடனும் சீனா ஆக்கிரமிப்பு மற்றும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
நரேந்திர மோடி கண்டனம்
இந்த நிலையில், 5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோ நகரில் இந்தியா மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசினார்.
                                                                                                    மேலும், . . . .
புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற நிதி உதவி இந்தியாவில் 5 ஆண்டுகளில் ஜப்பான் ரூ.2 லட்சம் கோடி முதலீடு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியாவில் இன்னும் 5 ஆண்டுகளில் புல்லட் ரெயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடியை ஜப்பான் முதலீடு செய்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி-ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்து ஆயின.
டோக்கியோ, செப்டம்பர்,02-09-2014,
5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை ஜப்பான் சென்றார்.
டோக்கியோவில் நரேந்திர மோடி
முதல் 2 நாட்கள் ஜப்பானின் பழைய தலைநகரான கியோட்டோவில் அவர் தங்கி இருந்தார். முதல் நாளில், உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரை கியோட்டோ போன்று நவீன நகராக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2-வது நாளான நேற்று முன்தினம் நரேந்திர மோடி, கியோட்டோ நகரில் உள்ள டோஜி புத்த கோவிலுக்கு சென்று வழிபட்டார். கியோட்டோ பல்கலைக்கழகத்துக்கும் சென்றார். பின்னர் அங்கிருந்து தலைநகர் டோக்கியோவுக்கு பயணம் ஆனார்.
சுற்றுப்பயணத்தின் 3-வது நாளான நேற்று டோக்கியோ நகரில் நரேந்திர மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது
                                                                                                                                     மேலும், . . . 

ரூ.6 கோடி மருத்துவ மூலப்பொருட்களுடன் மினி லாரி கடத்தல்: சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது மேலும் 8 பேருக்கு வலைவீச்சு

காஞ்சீபுரம், செப்டம்பர்,02-09-2014,
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.6 கோடி மருத்துவ ரசாயன மூலப்பொருட்களுடன் மினி லாரியை கடத்திய சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மினி லாரி கடத்தல்
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை ‘மல்லாடி மெடிசன் கம்பெனி’யில் இருந்து மருத்துவ ரசாயன மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு 3 மினி லாரிகள் ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை ஜங்சன் வழியாக தாம்பரத்திற்கு சென்று கொண்டு இருந்தன. அதில் 2 வாகனங்கள் முன்னால் வேகமாக சென்று விட்டன.
ஒரு மினி லாரி மட்டும் ஸ்ரீபெரும்புதூர் மலைப்பட்டு கிராமம் அருகே சென்று கொண்டு இருந்தபோது ஒரு கார் திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்து மினி லாரியை தடுத்து நிறுத்தியது.
                                                                                          மேலும், . . . .
இந்தியாவின் மிகச்சிறந்த அடையாளமான நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் செயல்பட தொடங்கியது

பாட்னா, செப்டம்பர்,02-09-2014,
821 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக அழிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.
உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்திய மாணவ-மாணவிகள், இன்று வெளிநாடுகளுக்கு பயணமாகிறார்கள். ஆனால் ஒருகாலத்தில் பல்வேறு வெளிநாட்டு மாணவர்களின் கனவு பல்கலைக்கழகமாக இருந்தது, இந்தியாவில் செயல்பட்ட நாலந்தா பல்கலைக்கழகம்.
குப்த பேரரசர்கள்
தற்போதைய பீகார் மாநிலப்பகுதியில் கி.பி.5-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட நாலந்தா பல்கலைக்கழகம், 14 ஹெக்டேரில் பரந்து விரிந்து காணப்பட்டது.
இந்தியாவை ஆட்சி செய்த குப்த பேரரசர்களின் காலத்தில், குறிப்பாக அரசர் சக்ராதித்யாவின் காலத்தில் இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீனாவை ஆண்ட டாங் பேரரசின் காலத்தில் இந்தியாவுக்கு யாத்ரீகராக வந்த அறிஞர் யுவான்சுவாங் இங்கே 12 ஆண்டுகள் தங்கி படித்து இருக்கிறார்.
                                                                                           மேலும், . . . 

No comments:

Post a Comment