Sunday 14 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

மும்பையைப்போல தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயார் நிலையில் 400 கமாண்டோ வீரர்கள் தமிழகம் முழுவதும் உஷார் நிலை

சென்னை, செப்டம்பர், 15-09-2014-
மும்பையில் கடல் வழியாக புகுந்து தாக்குதல் நடத்தியதுபோல, தமிழகத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினால் பதிலடி தாக்குதல் நடத்த, 400 கமாண்டோ படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் சதி
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து தாக்குதல் நடத்தியது போல, இலங்கையில் இருந்து கடல் வழியாக புகுந்து தமிழகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதை உறுதிபடுத்தும் வகையில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர், தங்கள் ஆதரவு உளவாளிகளை தமிழகத்திற்குள் ஊடுருவ விட்டுள்ளனர்.
ஊடுருவிய பாகிஸ்தான் உளவாளிகள் தமீம் அன்சாரி திருச்சியிலும், ஜாகீர் உசேன், சிவபாலன், சலீம், ரபீக் மற்றும் அருண் செல்வராசன் ஆகியோர் சென்னையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் முகமது உசேன் என்ற உளவாளி கைதாகி இருக்கிறார். இவர்களில் அருண் செல்வராசன் கடந்த வாரம் சென்னை சாலி கிராமத்தில் கைதானார். கைதான ஜாகீர் உசேன், அருண் செல்வராசன் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
20 இடங்களை தாக்க சதி
இந்த உளவாளிகளை தமிழக கியூ பிரிவு போலீசாரும், மத்திய அரசின் தேசிய புலனாய்வுப்பிரிவு போலீசாரும் இணைந்து அதிரடி வேட்டை நடத்தி பிடித்துள்ளனர்.
                                                                                               மேலும், . . .

தூத்துக்குடியில் அ.தி.மு.க. மேயர் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் பா.ஜனதா மீது ஜெயலலிதா தாக்கு தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது


தூத்துக்குடியில் அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்அந்தோணிகிரேசியை ஆதரித்து பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பாரதீய ஜனதா இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி, செப்டம்பர், 15-09-2014-
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வருகிற 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அந்தோணி கிரேசி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.
இதற்காக சென்னையில் இருந்து அவர் விமானத்தில் மதுரை வந்து, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி புறப்பட்டார்.
                                                                                                                       மேலும், . . .

நின்ற லாரி மீது கார் மோதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப சாவு


திண்டுக்கல், செப்டம்பர், 15-09-2014-
திண்டுக்கல் அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால், கார் மோதிய பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கல்லூரி பெண் விரிவுரையாளர்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயன்குடி சாத்தூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடாசலம் (வயது 37). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருடைய மனைவி கீதா (35), அங்குள்ள ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். இவர்களது மகன்கள் ஸ்ரீராம் (12), ஸ்ரீபாலாஜி (11).
இதில் ஸ்ரீபாலாஜி லால்குடி அருகே ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். ஸ்ரீராம், திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இதற்காக அந்த பள்ளியின் விடுதியில் தங்கியுள்ளான்.
மகனை பார்க்க...
விடுமுறை நாட்களில் வெங்கடாசலம் தம்பதியினர் பண்ணைக்காடு சென்று ஸ்ரீராமை பார்த்து வருவது வழக்கம்.
                                                                                                 மேலும், . . .

சென்னையில் கைதான தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதி யார்? கருணாநிதி கேள்வி

சென்னை, செப்டம்பர், 15-09-2014-
சென்னையில் கைதான தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதி யார்? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய புலனாய்வு அமைப்பு
கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே தமிழகத்தின் ஏடுகளில் வெளிவந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கும் முக்கிய செய்தியில், மாநிலத்தில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட ஒரு குழுவே சதித் திட்டம் வகுத்துள்ளது என்று தேசியப் புலனாய்வு அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது என்பதாகவும்,
இதையடுத்து அவர்களின் தேடுதல் வேட்டையில் சென்னையில் பதுங்கியிருந்த அருண் செல்வராசன் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டதாகவும், தமிழகத்தின் முக்கிய இடங்களைக் குண்டு வைத்துத் தகர்த்து மாநிலத்தையே நிலைகுலையச் செய்திடும் நாச வேலைக்கான திட்டத்தை தீவிரவாதிகள் வைத்துள்ளனர் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் சதி வேலை
தமிழகத்தில் அத்துமீறி நுழைந்து அழிவு வேலை செய்ய பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருவதும் அம்பலமாகியுள்ளது.
                                                                                                   மேலும், . . . 

No comments:

Post a Comment