Wednesday 24 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

இந்தியா வரலாற்று சாதனை


செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
பெங்களூர், செப்டம்பர், 25-09-2014,
பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
மங்கள்யான் விண்கலம்
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (‘இஸ்ரோ’) விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட 1,350 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி பிற்பகல் விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிட்டபடி மங்கள்யான் விண்கலம் டிசம்பர் 1-ந் தேதி பூமியின் ஈர்ப்பு சக்தியில் இருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
                                                                                                       மேலும், . . . . 

கருணாநிதியுடன் டாக்டர் ராமதாஸ் ‘திடீர்’ சந்திப்பு தி.மு.க.வுடன் கூட்டணியா என்பது பற்றி பேட்டி

சென்னை, செப்டம்பர், 25-09-2014,
கருணாநிதியை, டாக்டர் ராமதாஸ் நேற்று சந்தித்து பேசினார். தி.மு.க.வுடன் பா.ம.க. மீண்டும் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
கருணாநிதியுடன் சந்திப்பு
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேரன்- பேத்தி (ராமதாஸ் மகள் காந்தி மகன் பிரித்தீவனுக்கும்-மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மகள் சம்யுக்தாவுக்கும்) திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அக்டோபர் 30-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி, திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு டாக்டர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் நேற்று காலை 10.40 மணியளவில் வந்தார்.
                                                                                            மேலும், . . . . 

காஞ்சீபுரம் அருகே பல்கலைக்கழக விடுதியில் குளியல் அறையில் மாணவிகளை படம் எடுத்த ஊழியருக்கு அடி-உதை கலெக்டரிடம் மாணவிகள் புகார்; வாகனங்கள் உடைப்பு


காஞ்சீபுரம், செப்டம்பர், 25-09-2014,
பல்கலைக்கழக விடுதி குளியல் அறையில் மாணவிகள் குளிப்பதை படம் எடுத்த ஊழியரை மாணவிகள் பிடித்து அடித்து உதைத்தனர். அவரை கைது செய்யக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்த மாணவிகள் ஆத்திரத்தில் பல்கலைக்கழக வாகனங்களையும் அடித்து நொறுக்கினார்கள்.
பல்கலைக்கழக மாணவிகள்
காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் சங்கரா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் ஏராளமான மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலான மாணவிகள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரீசியன் மற்றும் பிளம்பராக ஏனாத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்த ஜே.ராஜா (வயது 33) வேலை பார்த்து வருகிறார்.
                                                                                                        மேலும், . . . . .

சென்னை கார் டிரைவர்களை கடத்திக்கொன்ற கொலைக்கும்பல் தலைவன் கைது துண்டு, துண்டாக வெட்டிக்கொல்லப்பட்டவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

சென்னை, செப்டம்பர், 25-09-2014,
சென்னையை சேர்ந்த கார் டிரைவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை கும்பல் தலைவன் விஜி கைது செய்யப்பட்டார்.
அதிரடி கொலைகள்
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் தனியாக செல்லும் கார் டிரைவர்கள், கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. கடந்த 6 மாதத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து லாரி, கார், வேன்களை ஓட்டிச்சென்ற டிரைவர்கள் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 3 கொலை சம்பவங்களில் ஒரு மாபாதக கும்பலுக்கு தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை மதுரவாயலில் இருந்து, காரில் தோல்களை ஏற்றிச்சென்ற டிரைவர் வாசிம்அக்ரம், வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் ஓட்டிச்சென்ற காரையும் புதுச்சேரியில் விற்பனை செய்துவிட்டனர்.
இதேபோல சென்னை அம்பத்தூரில் இருந்து சென்ற கார் டிரைவர் முருகேசன், கடந்த மார்ச் மாதம், வேலூர் மாவட்டம், வாலாஜா பகுதியில் விரிஞ்சிபுரம் என்ற இடத்தில்
                                                                                                         மேலும், . . . . 

No comments:

Post a Comment