Friday 5 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தண்டனை காலத்தில் பாதிக்குமேல் சிறையில் அனுபவித்த விசாரணை கைதிகளை விடுவிக்க வேண்டும் 2 மாதத்துக்குள் பணியை முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் சிறையில் அனுபவித்த விசாரணை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும், 2 மாதங்களுக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி, செப்டம்பர், 06-09-2014,
இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில்3 லட்சத்து 81 ஆயிரம் பேர் கைதிகளாக உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 54 ஆயிரம் பேர் விசாரணை கைதிகள் ஆவார்கள்.
விசாரணை கைதிகள்
இந்த விசாரணை கைதிகளில் ஏராளமான பேர், அவர் கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக கிடைக்கும் தண்டனை காலத்தை விட, அதிக காலம் சிறையில் இருந்து வருகிறார்கள்.
விசாரணை கைதி ஒருவருக்கு அவர் செய்த குற்றத்துக் காக அதிகபட்சமாக எவ்வளவு காலம் சிறை தண்டனை கிடைக்குமோ அந்த தண்டனை காலத்தில் பாதி நாட்களை அவர்
                                                                                          மேலும், . . . . 

சினிமா பைனான்சியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த துணை நடிகை பெங்களூரில் கைது ஆபாச படத்தில் நடிக்க வலியுறுத்தியதால் கொன்றதாக வாக்குமூலம்

பூந்தமல்லி, செப்டம்பர், 06-09-2014,
சினிமா பைனான்சியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த துணை நடிகை, பெங்களூரில் கைது செய்யப்பட்டார். ஆபாச படங்களில் நடிக்க கூறி வலியுறுத்தியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சினிமா பைனான்சியர்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரெனால்ட் பீட்டர் பிரின்சோ(வயது 36). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். பின்னர் சென்னை வந்த அவர், மதுரவாயலில் தங்கி இருந்து ஆன்-லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார்.
மேலும் சினிமா படங்களுக்கு நிதி உதவியும் வழங்கினார். அத்துடன் சில படங்களிலும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் ரெனால்டுக்கும், மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் மெயின்ரோடு, வி.ஆர்.எஸ்.நகர் பகுதியில் வசித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த துணை நடிகை சுருதி என்ற
                                                                                                     மேலும், . . .  

மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி, குடிநீர் திட்டங்களுக்கு விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் மத்திய மந்திரியிடம் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தல்

சென்னை, செப்டம்பர், 06-09-2014,
மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி, குடிநீர் திட்டங்களுக்கு விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார்.
ஜெயலலிதாவுக்கு பாராட்டு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று சந்தித்து பேசினார். ஜெயலலிதா மிகவும் மதிக்கத்தக்கவர், மூத்த அரசியல்வாதி என்று அவர் பாராட்டினார்.
திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடியாக இருக்கும் முதல்-அமைச்சர் என்றும் ஜெயலலிதாவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்துவரும் அளப்பரிய முயற்சிகளை வெங்கையா நாயுடு வெகுவாக பாராட்டினார். மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடலில் இருந்து குடிநீர்
தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள கடல்நீரை குடிநீராக்கும் இரண்டு திட்டங்களுக்கு (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் குடிநீர் நிலையம்) தேவையான ஆதரவை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
                                                                                               மேலும், . . . . 

கொலை வழக்கு விசாரணையில் போலீஸ் சித்ரவதைக்கு உள்ளான பெண், ஐகோர்ட்டில் ஆஜர் சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க உத்தரவு


சென்னை, செப்டம்பர், 06-09-2014,
கொலை வழக்கு விசாரணையில் போலீசாரால் கொடூர சித்ரவதைக்கு உள்ளான பெண்ணை சென்னையில் உள்ள பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, சிகிச்சை வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், மதுரையை சேர்ந்த பி.ராஜகுமாரி (வயது 26) தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சித்ரவதை
என்னுடைய தாயார் சந்திரா (49) திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி என் தாயார் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் லீலாவதி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த உடுமலைப்பேட்டை போலீசார், என் தாயாரை பிடித்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவரை அரைநிர்வாணப்படுத்தி தலைகீழாக தொங்கவிட்டும், கை விரல் நகங்களின் இடுக்குகளில் ஊசியால் குத்தியும் கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர். பின்னர், ஆகஸ்டு 14-ந் தேதி என் தாயாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்தனர்.
ஆஜர்படுத்தவேண்டும்
4 நாட்கள் கொடூர சித்ரவதைக்கு உள்ளான என் தாயாரால் தற்போது நடக்கக்கூட முடியவில்லை.
                                                                                  மேலும், . . . .

No comments:

Post a Comment