Tuesday 2 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து மனு 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி, செப்டம்பர், 03-09-2014,
கொடைக்கானல், பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க.வினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பயணம் செய்த பஸ், தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டி அருகே சென்றபோது, அ.தி.மு.க. வினர் அந்த பஸ்சை தீ வைத்துக் கொளுத்தினர்.
3 மாணவிகள் பலி
இந்த சம்பவத்தில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற 3 மாணவிகள் தீயில் உடல் கருகி பலியானார்கள். இந்த வழக்கில் சேலம் கோர்ட்டு, 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும் அளித்து தீர்ப்பு கூறியது.
இதே ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டும் இந்த தண்டனையை உறுதி செய்தது.
                                                                                            மேலும், . . . 

நாட்டு வெடிகுண்டுகளை வீசி, வீடு புகுந்து தாக்குதல் அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை தலைகளை துண்டித்து எடுத்துச்சென்ற மர்ம கும்பலுக்கு வலைவீச்சு



சிதம்பரம், செப்டம்பர், 03-09-2014,
சிதம்பரம் அருகே ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி அண்ணன்-தம்பியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து, இருவரின் தலைகளையும் துண்டித்து எடுத்துச்சென்று மருத்துவமனை வாசலில் வீசி விட்டு தப்பிச்சென்றன.
பிரபல ரவுடி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் அருகே உள்ள கழுங்குமேட்டைச் சேர்ந்த மணி என்பவருடைய மகன் குமார் (வயது 34). பிரபல ரவுடியான இவர் அண்ணாமலை நகர் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஆம்புலன்சு வைத்து தொழில் செய்து வந்தார். இதனால் அவரை ஆம்புலன்சு குமார் என்று நண்பர்கள் அழைத்தனர்.
இவர் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் நகர நிர்வாகியாக இருந்தார். இவருக்கு ராஜேஷ் (32) என்ற தம்பி உண்டு. அவரும் ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார்.
கடந்த மாதம் 27-ந் தேதி குமாரின் தங்கை ஆஷாவுக்கும், சீர்காழி பகுதியை சேர்ந்த தமிழ்வாணனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் குமாரின் வீட்டில் தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவில் அவர்கள் குமார் வீட்டின் முன்புள்ள பந்தலுக்குள் படுத்து தூங்கினார்கள். அதன் அருகே உள்ள கொட்டகையில் குமாரின் நண்பர்கள் 6 பேர் படுத்திருந்தனர்.
                                                                                           மேலும், . . . . 

உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு வைகோ, விஜயகாந்துடன் தமிழிசை சவுந்திரராஜன் சந்திப்பு பா.ஜ.க.வுக்கு முழு ஆதரவு அளிப்பதாக ம.தி.மு.க. அறிவிப்பு

சென்னை, செப்டம்பர், 03-09-2014,
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு, வைகோ மற்றும் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசினார். இதில், பா.ஜ.க.வுக்கு முழு ஆதரவு அளிப்பதாக ம.தி.மு.க. தெரிவித்துள்ளது.
வைகோவுடன் சந்திப்பு
தமிழகத்தில் உள்ள பல்வேறு உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருந்தது. ஆனால், உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தமிழக பா.ஜ.க. அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தனது கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகிறார்.
                                                                                                                     மேலும், . . . 

பழனியில் பரபரப்பு கொலை செய்யப்பட்ட 2 ஆட்டோ டிரைவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு சாலை மறியல் செய்தவர்கள் மீது போலீசார் தடியடி


பழனி, செப்டம்பர், 03-09-2014,
பழனியில், கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் 2 பேரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோ டிரைவர்கள் கொலை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர்கள் உதயகுமார் (வயது 36), சதீஷ்குமார் (38), பாலாஜி (26). இவர்கள் 3 பேரும் ஆட்டோ டிரைவர்கள். இதில் உதயகுமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 29-வது வார்டு செயலாளராகவும், சதீஷ்குமார் 31-வது வார்டு செயலாளராகவும், பாலாஜி 31-வது வார்டு தொண்டர் அணி செயலாளராகவும் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும், பழனியில் உள்ள தனியார் மதுபான பாருக்கு சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல், அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் பாலாஜி, உதயகுமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சதீஷ்குமார் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த சதீஷ்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
                                                                                            மேலும், . . . 

No comments:

Post a Comment