Thursday 18 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

டெல்லியில் 90 நிமிடம் பேச்சுவார்த்தை இந்தியா-சீனா எல்லை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்



பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் டெல்லியில் 90 நிமிடம் சந்தித்து பேசினார்கள். அப்போது, இந்தியா-சீனா எல்லை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று சீன அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
புதுடெல்லி, செப்டம்பர், 19-09-2014,
சீன அதிபர் ஜின் பிங், இந்தியாவில் முதல் முறையாக 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மனைவியுடன் வந்தார்
அவர், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு நேற்று முன்தினம் (புதன்கிழமை) தனி விமானத்தில் வந்தார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் வெளியுறவு மந்திரி வாங் யி, வர்த்தக மந்திரி காவ் ஹூசெங் உள்பட 150 பேரை கொண்ட உயர் மட்ட தூதுக்குழுவினரும் வந்தனர்.
ஒரு சிறப்பு நிகழ்வாக ஆமதாபாத் ஓட்டலில் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்று பேசினார்.
                                                                                             மேலும், . . . . .

பிளஸ்-2, பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியலும் அச்சடிப்பு என்ஜினீயரிங் படிப்பு போலி சான்றிதழ் ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை அரசு ஊழியர் உள்பட 4 பேர் கைது

சென்னை, செப்டம்பர், 19-09-2014,
சென்னையில் போலி என்ஜினீயரிங் படிப்பு சான்றிதழ்களை தயாரித்து, ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்த அரசு ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலி சான்றிதழ் கும்பல்
உயிரைக் கொடுத்து கஷ்டப்பட்டு, இரவு-பகலாக கண் விழித்து படித்து மாணவ செல்வங்கள், நல்ல மதிப்பெண்களை பெற்று, என்ஜினீயரிங், மருத்துவ படிப்பு படிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், பள்ளிக்கூடம் போகாமல், கல்லூரி பக்கமே தலை வைத்து படுக்காமல், அண்ணா பல்கலை கழகத்தின் வாசலில் கூட கால் வைக்காமல் படிப்பு சான்றிதழ்களை விலை கொடுத்து வாங்கி ஒரு கும்பல், நல்ல சம்பளத்துடன், நல்ல வேலையில் சேர்ந்து, ஓகோ என்று வாழ்கிறார்கள்.
இவர்களுக்கு படிப்பு சான்றிதழ்களை விற்பனை செய்த போலி கும்பலைச் சேர்ந்த 3 பேர் கடந்த ஜூன் மாதம் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
                                                                                                                 மேலும், ,. . . . 
பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு இந்தி திணிப்பு முயற்சியை எதிர்த்து முறியடிப்போம் ஜெயலலிதா அறிக்கை

சென்னை, செப்டம்பர், 19-09-2014,
இந்தி திணிப்பு முயற்சியை எதிர்த்து முறியடிப்போம் என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தலைவர்கள் கருத்து
இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டி, இந்த சுற்றறிக்கையை திரும்பப்பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் 16-ந் தேதியன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்தி சமிதி கூட்டம்
இந்தச் சுற்றறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது, அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதியின் 30-வது கூட்டம் கடந்த 28-7-11 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்றதும்,
                                                                                                           மேலும், ., . . .

போரூர் அருகே ரேஷன் கடை ஊழியர் கொலையில் பெண் உள்பட 3 பேர் கைது காதலியை பிரித்ததால் ஆத்திரம்

பூந்தமல்லி, செப்டம்பர், 19-09-2014,
போரூர் அருகே ரேஷன் கடை ஊழியர் கொலை வழக்கில் சரண் அடைந்த வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் பெண் உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். காதலியை பிரித்த ஆத்திரத்தில் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
ரேஷன் கடை ஊழியர் கொலை
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம், ஐ.டி.பி.எல். காலனியைச் சேர்ந்தவர் தேவராஜ்(வயது 44). இவர், போரூரை அடுத்த மவுலிவாக்கம், சுலோச்சனா நகரில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். 2 கால்களும் செயல் இழந்து விட்டதால் ரேஷன் கார்டுகளுக்கு பில் மட்டும் போடுவார். பொருட்களை எடை போட உதவிக்காக உடன் ஒருவரை வேலைக்கு வைத்து இருந்தார்.
இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி மாலை தேவராஜ், வேலை முடிந்து கடையில் உள்ள பொருட்கள் எவ்வளவு இருப்பு உள்ளது? என்று சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், திடீரென ரேஷன் கடைக்குள் புகுந்து தேவராஜை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் தேவராஜ், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையான தேவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
                                                                                        மேலும் . . . . 

No comments:

Post a Comment