Tuesday 16 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
9 மாநிலங்களில் 32 எம்.எல்.ஏ., 3 எம்.பி. தொகுதி இடைத்தேர்தல் முடிவு: பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிகளில் 8 இடங்களை சமாஜ்வாடி கைப்பற்றியது

9 மாநிலங்களில் 32 எம்.எல்.ஏ., 3 எம்.பி. தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றன.
புதுடெல்லி, செப்டம்பர், 17-09-2014,
நாடு முழுவதும் காலியாக இருந்த 3 எம்.பி., 33 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
நரேந்திர மோடி
நரேந்திர மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தின் வதோதரா, உத்தரபிரதேசத்தின் வாரணாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். பிரதமர் பதவியேற்ற பிறகு வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல் மேடக் பாராளு மன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்ற தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கானா முதல்-மந்திரியாக பதவியேற்றதும் மேடக் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
உத்தரபிரதேசத்தில் மைன்புரி, அசம்கார் தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங், பின்னர் மைன்புரி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
                                                                                                      மேலும், . . . .

பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் பாகிஸ்தான் உளவாளி ஆஜர் போலீஸ் காவலுக்கு அனுப்புவது பற்றி இன்று முடிவு

பூந்தமல்லி, செப்டம்பர், 17-09-2014,
பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் பாகிஸ்தான் உளவாளி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலுக்கு அனுப்புவது பற்றி இன்று நீதிபதி அறிவிப்பார்.
பாகிஸ்தான் உளவாளி
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான தமீம் அன்சாரியை தேசிய புலனாய்வு போலீசார் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கல்பாக்கம் அனுமின் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய இடங்களின் புகைப்படங்கள் அடங்கிய சி.டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தன்னைப்போல் உளவாளிகள் 3 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக அவர் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த வருடம் மண்ணடியில் ஜாகீர் உசேனை போலீசார் கைது செய்தனர். இவர் மீது உளவு பார்த்தல் மற்றும் கள்ள நோட்டு வழக்குகள் உள்ளன.
இவருக்கு உடந்தையாக இருந்ததாக முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
                                                                                                      மேலும், . . . 

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று பரப்பன அக்ரஹாராவுக்கு தனிக்கோர்ட்டு மாற்றம்

பெங்களூர், செப்டம்பர், 17-09-2014,
பாதுகாப்பு காரணங்களுக்காக தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு இடம் மாற்றியும் அதற்கு வசதியாக சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பை 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தும் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கு
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களின் வக்கீல்கள் இறுதி வாதத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு 20-ந் தேதி வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவித்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா சார்பில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
                                                                                                           மேலும், . . . 

குடிசை வீட்டில் பயங்கர தீ விபத்து: தந்தை-மகள் உள்பட 3 பேர் கருகி சாவு மாடியில் இருந்து குதித்த 2 பேர் உயிர்தப்பினர்


திருச்சி, செப்டம்பர், 17-09-2014,
குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தந்தை-மகள் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர். மாடியில் இருந்து குதித்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குடிசை வீட்டில் தீ விபத்து
திருச்சி பாலக்கரை தர்மநாதபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அடைக்கலராஜ் (வயது 42). அ.தி.மு.க பிரமுகரான இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஆரோக்கிய ரோஸ் (37). இவர்களுக்கு நிஷா(10) என்ற மகளும், லித்திஷ் நியூட்டன்(12) என்ற மகனும் உள்ளனர். நிஷா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பும், லித்திஷ் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இவர் தனது குடும்பத்துடன் தனது அண்ணன் அற்புதம் என்பவர் வீட்டின் மாடியில் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வீட்டின் கீழ் பகுதியில் அடைக்கலராஜின் சித்தி செல்வராணி (60), தனது மகன் வின்சென்ட்டுடன் வசித்து வருகிறார். அடைக்கலராஜ் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தந்தை-மகள் பலி
இதனால் அதிர்ச்சி அடைந்த அடைக்கலராஜ் தனது மனைவி ஆரோக்கிய ரோஸ் மற்றும் மகன் லித்திஷ் நியூட்டனை மாடியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பும்படி கூறினார்.
                                                                                   மேலும், . . . 

No comments:

Post a Comment