Monday 22 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவு கோவை, தூத்துக்குடி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி 4 நகராட்சி தலைவர் பதவி உள்பட பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்றஇடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. கோவை, தூத்துக்குடி மேயர் பதவிகள், 4 நகராட்சி தலைவர் பதவிகள் உள்பட பெரும்பாலான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.
சென்னை, செப்டம்பர், 23-09-2014,
தமிழ்நாட்டில் கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, கடலூர், விருத் தாசலம், அரக்கோணம், ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட 530 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
அ.தி.மு.க. அமோக வெற்றி
இந்த இடைத்தேர்தலை தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இந்த இடைதேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. பெரும்பாலான இடங்களை அந்த கட்சி கைப்பற்றியது.
                                                                                                   மேலும், . . . . 

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் கணவன் கண் எதிரே புதுப்பெண் தலைநசுங்கி சாவு பஸ்சை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்கள்


திருச்சி, செப்டம்பர், 23-09-2014,
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் கணவன் கண் எதிரே புதுப்பெண் தலை நசுங்கி பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பஸ்சை அடித்து நொறுக்கினார்கள்.
புதுமண தம்பதி
திருச்சி பொன்மலை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சதீஷ்பாபு (வயது 29). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலிய உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி என்ற பத்மாவதி (26). இந்த தம்பதியினருக்கு கடந்த 4-ந் தேதி திருச்சி பொன்மலையில் திருமணம் நடந்தது.
சதீஷ்பாபு நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு பணிக்கு சென்றார். மனைவி ரேவதி மற்றும் அவரது தாய், குடும்பத்தினர் துணிகள் எடுப்பதற்காக திருச்சி பெரிய கடை வீதிக்கு வந்தனர். சதீஷ்பாபு பணி முடிந்ததும் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் பெரிய கடை வீதிக்கு வந்தார்.
                                                                                                                      மேலும், . . . . .

சென்னை மெரினாவில் கடத்தல் பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்க முயன்ற பெண் கைது


சென்னை, செப்டம்பர், 23-09-2014,
சென்னை மெரினாவில் பச்சிளம் ஆண்குழந்தை கடத்திச்செல்லப்பட்டது. அந்த ஆண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விலைபேசிய பெண் கைது செய்யப்பட்டார்.
ஆண் குழந்தை கடத்தல்
சென்னை கந்தன்சாவடி, வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 32). இவரது கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, தனியாக சென்றுவிட்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை பிறந்தன. ஒரு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும், கணவர் தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார். அப்துல்லா என்ற 6 மாத பச்சிளம் ஆண் குழந்தையை மட்டும் பாத்திமா தன்னுடன் வைத்திருந்தார்.
குழந்தையுடன் மெரினாவுக்கு வந்து பாத்திமா பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு மெரினாவில் மாநில கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பாத்திமா உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம பெண் ஒருவர், பாத்திமாவிடம் பேச்சு கொடுத்தார். பாத்திமா தனது சோக கதையை சொல்லி வருத்தப்பட்டார்.
மர்ம பெண், பாத்திமாவின் குழந்தையை கையில் வாங்கி முத்தமிட்டு கொஞ்சினார். அப்போது பாத்திமா, அருகில் மறைவான இடத்திற்கு சிறுநீர் கழிக்க சென்றார்.
                                                                                                   மேலும், . . . . .

ஏழை நோயாளிகள், பார்வையாளர்களின் நலனுக்காக சென்னையில் மேலும் 4 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம் ஜெயலலிதா திறந்து வைத்தார்



சென்னை, செப்டம்பர், 23-09-2014,
சென்னையில் 4 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஏழை-எளிய மக்கள்
சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் அம்மா உணவகங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியில் 203 அம்மா உணவகங்கள் ஏழை, எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி மற்றும் பொங்கல் சாம்பார், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 2 சப்பாத்தியுடன் பருப்பு கடைசல் ஆகியவை தரமானதாகவும் சுகாதாரமாகவும் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஏழை எளிய மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக 20.11.13 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும்,
                                                                                                             மேலும், . . . . 

No comments:

Post a Comment