Saturday 13 September 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-09-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-09-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி பற்றி மேலும் விசாரணை தேசிய புலனாய்வு குழு இலங்கை செல்கிறது தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி பற்றி மேலும் விசாரணை நடத்துவதற்காக, தேசிய புலனாய்வு குழு இலங்கை செல்கிறது. மேலும், தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, செப்டம்பர், 14-09-2014,
இந்தியாவில், அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
சென்னையில்பாக்.உளவாளி கைது
தமிழ்நாட்டில் ஏற்கனவே பாகிஸ்தான் உளவாளிகளான தமீம் அன்சாரி, இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன், அவரது கூட்டாளிகளான சிவபாலன், சலீம், ரபீக் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்பு வைத்து செயல்பட்ட முகமது உசேன் என்ற உளவாளி மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சென்னை சாலிகிராமம் முத்தமிழ் நகரில், இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை, மத்திய உளவுத்துறை அளித்த
                                                                                       மேலும், . . . . .

நசரத்பேட்டையில் கணவன், மனைவி கொலை: கொலையை ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதால் பெயிண்டர் தற்கொலை போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்

திருவள்ளூர், செப்டம்பர், 14-09-2014,
திருவள்ளூர் அருகே கணவன், மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதால் பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கணவன்-மனைவி கொலை
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் இலுப்பூர், பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 45). பெயிண்டரான இவருக்கு ராஜேஸ்வரி (38) என்ற மனைவியும், கனிஷ்கரன்(21) என்ற மகனும், ஸ்வேதா(16) என்ற மகளும் உள்ளனர். கடந்த மாதம் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் கணவன், மனைவி இருவரையும், சிலர் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அந்த வீட்டிற்கு ரவி பெயிண்ட் அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த கொலை வழக்கில் பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். அப்போது போலீசார் பெயிண்டர் ரவி உட்பட சிலரை இவ்வழக்கு தொடர்பாக அழைத்துச் சென்று விசாரித்து விட்டு அனுப்பிவிட்டனர். நேற்று முன்தினம் மீண்டும் ரவியை பூந்தமல்லி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அவரை கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
விஷம் குடித்தார்
இதனால் மனவேதனையுடன் இரவு வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவங்களை கூறி தான் கொலை செய்யவில்லை என புலம்பினார்.
                                                                                               மேலும், . . . . . 

சென்னை பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 246 பேர் இந்திய ராணுவத்தில் இணைந்தனர்



சென்னை, செப்டம்பர், 14-09-2014,
சென்னை பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 246 பேர் இந்திய ராணுவத்தில் இணைந்தனர்.
ராணுவ பயிற்சி
சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம்(ஓ.டி.ஏ.) உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ராணுவத்தில் சேர தேர்வானவர்களுக்கு 11 மாத காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்தவருடம் இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 42 பெண்கள் உள்பட 246 பேருக்கு கடந்த 11 மாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஆப்கானிஸ்தான், லெசாத்தோ, செசல்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்பு நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. இதனை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் ராணுவ வீரர்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சி நடந்தது. ராணுவ பயிற்சியை நிறைவு செய்பவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று ஓ.டி.ஏ. வளாகத்தில் நடந்தது.
ராணுவ மிடுக்கு
நேற்று அதிகாலை 5 மணிக்கு இந்த சிறப்பு நிகழ்ச்சி பிரமாண்ட அணிவகுப்புடன் தொடங்கியது.
                                                                                                   மேலும், . . . . 

திருமணத்துக்கு முன்பு மருத்துவ பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட வேண்டுமா? மதுரை ஐகோர்ட்டில் சிறப்பு விசாரணை தொடங்கியது

மதுரை, செப்டம்பர், 14-09-2014,
திருமணத்துக்கு முன்பு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டுமா? என்பது பற்றிய சிறப்பு விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நேற்று தொடங்கியது.
ஆண்மைக் குறைவால் பிரச்சினை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த வாலிபருக்கும், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்த பெண் தனது கணவருக்கு ஆண்மைக் குறைவு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டு திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் மற்றும் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி சமூக நலத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தார்.
சமூக நலத்துறை அதிகாரி அறிக்கை அடிப்படையில் திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தனியாக ஒரு வழக்கு நடந்து வருகிறது.
                                                                                                       மேலும், . . . . 

No comments:

Post a Comment