Friday 29 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக, 7-வது முறையாக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக, 7-வது முறையாக ஒருமனதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
சென்னை, ஆகஸ்ட், 30-08-2014,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக் கான தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
தேர்தல் முடிவு
தேர்தல் ஆணையாளராக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்தல் முடிவு நேற்று, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டது.
விழாக்கோலம்
இந்த நிகழ்ச்சிக்காக தலைமைக் கழக அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
                                                                                                      மேலும், . . .

கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஆகஸ்ட், 30-08-2014,
கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பாளர்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.
உள்ளாட்சி இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் காலியாக உள்ளன.
இதேபோல் 8 நகர மன்ற தலைவர் பதவிகளுக்கும், 12 மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், 53 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும், 101 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 82 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
                                                                                           மேலும், . . . . 

பிராட்வே பஸ் நிலையத்தில் பரபரப்பு நரிக்குறவர் குழந்தை கடத்தல் திருநங்கைகள் 3 பேர் கைது


சென்னை, ஆகஸ்ட், 30-08-2014,
சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் பிளாட்பாரத்தில் வசித்த நரிக்குறவரின் குழந்தையை கடத்தியதாக திருநங்கைகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரு மாத ஆண் குழந்தை
சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் பிளாட்பாரத்தில் வசிப்பவர் விஜய் (வயது 32). நரிக்குறவரான இவர் பாசி போன்ற பொருட்களை பாரிமுனை பகுதியில் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் வஜா (30). இவர்களுக்கு பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு பெயர் சூட்டவில்லை.
சென்னை மண்ணடி ரேவு பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் முத்தழகு (24), சக்திநாயகி (32), பிரியா (19) ஆகியோர் தினமும் பிராட்வே பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளுக்கு ஆசி வழங்கி பணம் வசூலிப்பார்கள். அப்போது நரிக்குறவ தம்பதிகளான விஜய், வஜாவிடம் பழக்கம் ஏற்பட்டது.
                                                                                                        மேலும், . . . .

அரசியல் களத்தில் எதிரிகளையே காணவில்லை: “நாட்டு மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்” ஜெயலலிதா அறிக்கை

சென்னை, ஆகஸ்ட், 30-08-2014,
“நாட்டு மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்“ என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வான பிறகு ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.
நம்பிக்கை
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அந்த கட்சி நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் முறைப்படி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அலுவலக முதல் தளத்தில் இருந்து, கட்சித் தொண்டர்களுக்காக அவர் ஆற்றிய உரை வருமாறு:-
எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க. என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இன்று மீண்டும் என்னை நீங்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். என் மீது எல்லையில்லா நம்பிக்கை வைத்து, என் மீது அளவு கடந்த அன்பு கொண்டு நீங்கள் அனைவரும் ஒருமனதாக என்னை கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
26 ஆண்டு பதவி
இந்த கழகப் பொதுச் செயலாளர் என்னும் பொறுப்பை மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
                                                                                                   மேலும், . . . 

No comments:

Post a Comment