Sunday 24 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

காஷ்மீரில் 25 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல்
இந்திய ராணுவம் பதிலடி
எல்லையோர கிராமவாசிகள் வெளியேறுகிறார்கள்

காஷ்மீரில் 25 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
ஜம்மு, ஆகஸ்ட், 25-08-2014,
அண்டை நாடான பாகிஸ்தானுடன் எப்போதும் நல்லுறவு வைத்துக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது.
ஆனால் பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றன.
இந்தியாவுக்கு எதிராக அந்த நாட்டு தீவிரவாதிகள் ஒருபுறம் தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவமும் இந்திய எல்லையில் தொடர்ந்து வாலாட்டி வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
                                                                                                                     மேலும், . . . 

மடாதிபதியை கொல்ல முயற்சியா? திருப்பனந்தாள் மடத்திற்குள் நுழைந்த வாலிபரால் பரபரப்பு ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்



தஞ்சாவூர், ஆகஸ்ட், 25-08-2014,
திருப்பனந்தாள் மடத்திற்குள் நுழைந்த வாலிபரை பிடித்து ஊழியர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மடாதிபதியை கொல்ல முயற்சியா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பனந்தாள் மடம்
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் உள்ள காசிமடத்தை எஜமான் சுவாமிகள் என்று அழைக்கப்படும் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள்(வயது74) நிர்வகித்து வருகிறார். அங்கு வரும் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி வருகிறார். மடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் நேற்று காலை மடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் மடத்தின் சுவற்றில் ஏணியை வைத்து ஏறி, மடத்திற்குள் குதித்தார். பின்பு அந்த வாலிபர் தான் கொண்டு வந்த செல்போன் மூலம் மடத்தை படம் எடுத்து கொண்டிருந்தார். இதை பார்த்த முத்துகுமார தம்பிரான் சுவாமிகள் யார் நீ? எதற்காக செல்போனில் படம் எடுக்கிறாய்? என்று கேட்டார்.
உடனே அந்த வாலிபர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து தப்பி ஓடினார்.
                                                                                                  மேலும், . . . 

கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 1-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

திருச்சி, ஆகஸ்ட், 25-08-2014,
கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 1-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உண்ணாவிரத போராட்டம்
தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 25-ந் தேதி(இன்று) முதல் வருகிற 31-ந் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இணைந்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றன. இதற்காக இரு கம்யூனிஸ்டு கட்சிகளையும் சேர்ந்த 10 ஆயிரம் குழுவினர் வீடு, வீடாக மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்க இருக்கிறோம்.
வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.
                                                                                                                      மேலும், . . .  

சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் டெல்லி போலீசார் தகவல்

புதுடெல்லி, ஆகஸ்ட், 25-08-2014,
சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் கைது
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வரும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள், டெல்லி நங்லோய் அருகே மீர் விகார் பகுதியில் சட்டவிரோதமாக நடத்தி வந்த ஆயுத தொழிற்சாலை கடந்த 2011-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றிய டெல்லி சிறப்பு போலீசார், இது தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த சில தீவிரவாதிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த முக்கிய தீவிரவாதியான தேசின் அக்தர் கடந்த மார்ச் 25-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
                                                                                                                       மேலும், . . . 

No comments:

Post a Comment