Sunday 10 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

எபோலா அறிகுறி: ஆப்பிரிக்காவிலிருந்து சென்னை வந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, 10–08-2014
ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் இந்தியாவிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில், எபோலா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
இந்த நாடுகளில் இக்கொடிய காய்ச்சலுக்கு இதுவரை 1200 பேர் வரை பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எபோலா காய்ச்சல் பாதிப்புக்குள்ளான சியானா, வைபீரியா, நைஜீரியா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளிலும் சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருவதாக மத்திய அரசு கணக்கெடுப்பு கூறுகிறது.
ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் இந்திய ராணுவ வீரர்கள் பலரும் ஆப்பிரிக்க நாடுகளில் பணி புரிந்து வருகிறார்கள்.
இவர்களில் சுமார் 1000 இந்தியர்கள் எபோலா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஸ்வர்தன் இதனை தெரி வித்துள்ளார்.
இந்த நோயின் தாக்கம் வரும் காலங்களில் இன்னும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
                                                                                                                                    மேலும், . . .  

ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது 7 குழந்தைகள் உள்பட 48 பேர் பலி

டெஹ்ரான், 10-08-2014
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் 48 பேர் பயணித்துள்ளனர்.
                                                                                                  மேலும் , . . . . 

மத்திய அரசு கொள்கைகளுக்கு எதிர்ப்பு: பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறது

சென்னை, 10–08-2014
தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு அச்சாரம் போட்டது தமிழருவிமணியன். முதல் முதலில் கூட்டணியில் சேர்ந்தது ம.தி.மு.க., மற்ற கட்சிகளுக்கிடையே இழுபறி ஏற்பட்ட நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூட்டணி பற்றி பகிரங்கமாக அறிவித்தார்.
தேர்தலில் இந்த கூட்டணி எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. பா.ஜனதாவும், பா.ம.க.வும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
எனவே, தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணி நீடிக்குமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. வருங்காலத்தில் இந்த கூட்டணி நீடிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தனது விருப்பத்தை வெளியிட்டார்.
கூட்டணி பற்றி முதலில் அறிவித்தது போல் மோடி அரசு பதவி ஏற்றது முதல் அரசின் கொள்கைகளை ம.தி.மு.க. கடுமையாக எதிர்த்து வருகிறது.
                                                                                                   மேலும், . . . 

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி

மேட்டூர், 10-08-2014
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி டெல்டா பாசனத்திற்கென மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு 89 ஆயிரத்து 723 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
                                                                                                    மேலும், . . .

No comments:

Post a Comment