Saturday 16 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-08-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

யாரும் நமக்கு இனி சவால் விட முடியாது போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
மும்பை, ஆகஸ்ட், 16–08-2014,
ஐ.என்.எஸ்., கொல்கத்தா என பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
மும்பை துறைமுகத்தில் இன்று நடந்த விழாவில், போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்து பாதுகாப்பு படைகள் நவீனமயாமாக்கப்படுவது உறுதி செய்யபட்டு உள்ளது. யாரும் நமக்கு சவால் விட முடியாது. என கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
                                                                                                          மேலும், . . .

பா.ஜ., தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு தமிழகத்திற்கு முதல் பெண் தலைவர் தமிழக பா.ஜனதா தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜன் நியமனம்

புதுடில்லி, ஆகஸ்ட், 16–08-2014,
பா.ஜ., தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அமித்ஷா தனது படை தளபதிகளை அறிவித்தார். இதில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் மத்திய அமைச்சர் மகன் வருண்காந்தி பொதுசெயலர் பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இவருக்கு கட்சியில் வேறு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. தமிழகத்தை சேர்ந்த எச். ராஜா தேசிய செயலராகவும், லலிதாகுமாரமங்கலம் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராகவும், அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு மாநில தலைவர் பொறுப்பு முதன்முறையாக பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் நீண்ட காலம் பணியாற்றியவரும் சிறந்த பேச்சாளருமான தமிழிசை சவுந்திரராஜன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பார்லி., தேர்தலில் பா.ஜ., வெற்றிக்கு முழுக்காரணமாக இருந்தவர் அமித்ஷா என்றும் இவரே மேன் ஆப் தி மேட்ச் என்றும் பிரதமர் மோடி இவரை வெகுவாக பாராட்டினார். இவரது கட்சி தலைமை பொறுப்பு கடந்த வாரத்தில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
                                                                                                              மேலும், . . .

வீடுகளுக்கு அருகில் மதுக்கடைகள் நீதிமன்ற அறிவுரையை அரசு மதிக்குமா? - என ராமதாஸ் கேள்வி

சென்னை, ஆகஸ்ட், 16–08-2014,
வீடுகளுக்கு அருகில் மதுக்கடைகள் திறக்கப்படுவது கண்ணியமாக வாழ்வதற்கான மக்களின் உரிமையை பறிக்கும் செயல் என்றும், இத்தகைய மதுக்கடையை மூட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இதனை தமிழக அரசு மதித்து செயல்படுமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின்னர் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்வதைவிட மது விற்பனையை பெருக்குவதில் தான் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வீட்டிற்கு பக்கத்தில் மதுக்கடை திறக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பை நீதியரசர் நாகமுத்து வழங்கியிருக்கிறார். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்குள் மதுக்கடைகளை அமைக்கக்கூடாது என்று தான் விதிகள் கூறுவதாகவும், குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க எந்தவிதமான தடையும் இல்லை என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுத்துவிட்டது.
அதுமட்டுமின்றி, ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 ஆவது பிரிவு மக்கள் வாழ்வதற்கான உரிமையை வழங்கியிருக்கிறது.
                                                                                                                      மேலும், . . .

செங்குன்றத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடியை கொலை செய்த 7 பேர் கைது

சென்னை, ஆகஸ்ட், 16–08-2014,
செங்குன்றத்தில் முன்விரோதம் காரணமாக சரவணன் என்ற ரவுடியை வெட்டிப் படுகொலை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14.08.2014ம் தேதி காலை 11.15 மணிக்கு செங்குன்றம் பைப்பாஸ் ரோடு அருகில் ஒரு நபரை, மர்ம நபர்கள் சிலர் கத்தியால் வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர், இது குறித்து தகவலறிந்த செங்குன்றம் காவல்நிலைய ஆய்வாளர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
இது குறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
                                                                                                          மேலும், . . . 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்


நடிகர் : சந்தோஷ்
நடிகை : அகிலா கிஷோர்
இயக்குனர் : பார்த்திபன்
இசை : சத்யா
ஓளிப்பதிவு : ராஜரத்தினம்
நாயகன் சந்தோஷ் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். கதை விவாதத்திற்கு உதவியாக இவருடன் விஜய் ராம், தினேஷ், லல்லு மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். நாயகன் சந்தோஷ், நாயகி அகிலா கிஷோரை காதலித்து வருகிறார்.
இவர்கள் காதலிக்கும்போது சந்தோஷ் இயக்குனர் ஆன பிறகுதான் திருமணம் செய்துக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் அகிலா கட்டாயத்தின் பெயரில் அவளை திருமணம் செய்துக் கொள்கிறார் சந்தோஷ்.
அகிலா தனியார் கம்பெனியில் வேலை செய்வதால் சந்தோஷை வீட்டிலேயே இருந்துக்கொண்டே இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய் என்று கூறுகிறார். சந்தோஷும் தன் நண்பர்களுடன் வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். இது அகிலாவிற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.
சந்தோஷ் ஒரு கதையை தயார் செய்து தயாரிப்பாளரின் சம்மதத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் வேளையில், சந்தோஷ் அகிலா இருவரின் சண்டை மேலும் வலுவடைந்து விடுகிறது. சினிமா உலகில் இயக்குனராவது கடினம் என்பதை அறிந்து அகிலா, சந்தோஷிடம் நீங்கள் இயக்குனர் ஆகும் வரை நாம் பிரிந்து வாழலாம் என்று கூறிவிட்டு பிரிந்து செல்கிறார்.
பிறகு சந்தோஷ் தயாரிப்பாளரிடம் சென்று கதையை கூறி இயக்குனர் ஆனாரா? அகிலாவுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.



       







                                                                                                        மேலும், . . . 

சிநேகாவின் காதலர்கள் - விமர்சனம்

நடிகர் : திலக்
நடிகை : அத்வைதா
இயக்குனர் : முத்துராமலிங்கன்
இசை : பிரபாகர்
ஓளிப்பதிவு : ஆனந்த்
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பத்திரிகை தொழிலில் ரிப்போர்ட்டர் வேலை செய்து வருகிறார் சிநேகா. இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அண்ணன்-அண்ணி இருவரும், மாப்பிள்ளையாக எழிலை தேர்வு செய்ததுடன், அவரை பெண் பார்க்க வீட்டிற்கு அழைக்கிறார்கள். திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் சிநேகாவை கட்டாயப்படுத்தி வீட்டிற்கு வரவழைக்கிறார்கள். விருப்பம் இல்லாமல் பெண் பார்க்கும் படலத்தில் கலந்துக் கொள்ளும் சிநேகா, எழிலுக்கு கொடுத்த டீ கப்பில் என்னை பிடிக்கவில்லை என்று கூறும்படி எழுதி வைக்கிறாள்.

                                                                                         மேலும், . . .  

No comments:

Post a Comment