Wednesday 13 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-08-2014) மாலை, IST- 02.00 மணி, நிலவரப்படி,

பாராளுமன்ற துணை சபாநாயகராக அ.தி.மு.க. எம்.பி.யான தம்பிதுரை தேர்வு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, 13-08-2014,
அ.தி.மு.க. எம்.பி.யான தம்பிதுரை, பாராளுமன்ற துணை சபாநாயகராக இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு 279 உறுப்பினர்களும், அடுத்ததாக காங்கிரஸ் கட்சிக்கு 44 உறுப்பினர்களும் உள்ளனர்.
                                                                                                                         மேலும், . . . 

விமானத்தை கடத்த தீவிரவாதிகள் திட்டம் விமான நிலையங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு சிறையில் இருப்பவரை மீட்க திட்டம் விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதி

புதுடெல்லி, 13-08-2014,
இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக இந்திய முஜாகிதீன் என்னும் தீவிரவாத அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆதரவுடன் சிலர் தொடங்கினார்கள்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளும், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து சில தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
இதையடுத்து இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை வேட்டையாட மத்திய தீவிரவாத தடுப்புப்படை போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் பயனாக கடந்த ஆண்டு இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவனான யாசீன்பத்கல் என்பவரை நேபாள எல்லையில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிறகு அவன் டெல்லி விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டான்.
                                                                                                                  மேலும், . . .. 

சட்டசபை தேர்தலுக்கு பா.ம.க.வை தயார்படுத்த 17-ந்தேதி தைலாபுரத்தில் ஆலோசனை

சென்னை, 13-08-2014,
பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றது.
இதில் பா.ஜனதா சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனும், பா.ம.க. சார்பில் தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
2016–ல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை பா.ம.க. எவ்வாறு சந்திப்பது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதா? தனித்து போட்டியிடுவதா? பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி அமைப்பதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காண பா.ம.க. மேலிடம் விரும்புகிறது.
சட்டசபை தேர்தலை எவ்வாறு சந்திப்பது? அதற்கு பா.ம.க. எப்படி தயார் ஆக வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக வருகிற 17–ந்தேதி
                                                                                                        மேலும், . . . .  

இணையத்தில் பரவும் தீவிரவாதிகள் பேச்சு இளைஞர்களை திசை திருப்ப முயற்சி

சென்னை, 13-08-2014,
ஈராக்கில் அந்நாட்டு ராணுவத்தை எதிர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பு போரிட்டு வருகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சிலர் அந்நாட்டில் பணிபுரிந்த கேரளா மற்றும் தமிழக நர்சுகள் 46 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீவிரவாதிகளால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருந்த நிலையில் நர்சுகள் அனைவரையும் தீவிரவாதிகள் பத்திரமாக விடுவித்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பேஸ்புக்கில் இளைஞர்கள் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு கலர் பனியன் அணிந்து போஸ்
                                                                                                மேலும், . . . . 

No comments:

Post a Comment