Saturday 2 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (02-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (02-08-2014) மாலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அரசு வங்கிகளில் 6,800 கிலோ காணிக்கை தங்கம் டெபாசிட்
திருப்பதி, ஆகஸ்ட், 02-08-2014,
திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அரசு வங்கிகளில் 6 ஆயிரத்து 800 கிலோ காணிக்கை தங்கம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.
காணிக்கை தங்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வெள்ளி, தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். காணிக்கையாக சேகரிக்கப்பட்ட தங்க நகைகள் மும்பைக்கு எடுத்து செல்லப்பட்டு, அதனை உருக்கி வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார் உருவப்படம் பொறிக்கப்பட்ட டாலராக தயார் செய்யப்பட்டு, பக்தர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.
அதற்கு போக மீதமுள்ள தங்கநகைகள் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படுவதால் எந்த வட்டியும் கிடைப்பதில்லை.
                                                                                                    மேலும் , . . . .

நடப்பு லோக்சபாவில் 103 சதவீத செயல்பாடு மூன்று ஆண்டு முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி
புதுடில்லி, ஆகஸ்ட், 02-08-2014,
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மிக குறைந்த நேரமே செயல்பட்ட லோக்சபா, தற்போது திருப்தி அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு, லோக்சபாவில் பா.ஜ., பெரும்பான்மை பெற்றுள்ளதே காரணம். இதன் மூலம், கடந்த ஆட்சியின் போது நடந்த ஒவ்வொரு கூட்டத் தொடரிலும், பல கோடி ரூபாய் வரிப்பணம் வீணாகி வந்தது தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பெரும்பாலான நாட்கள் லோக்சபாவில் அமளி ஏற்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல், தெலுங்கானா பிரச்னை, லோக்பால், எல்லை பிரச்னை, டில்லி கற்பழிப்பு, சீன ஊடுருவல், நிலக்கரி சுரங்க ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், வி.வி.ஐ,பி., ஹெலிகாப்டர் ஊழல் போன்ற விவகாரங்கள் லோக்சபாவில் கடுமையாக எதிரொலி்த்தன.
இப்பிரச்னைகள் தொடர்பாக, அரசு விளக்கம் அளிக்க எதிர்கட்சிகள் கோரின. ஆனால், எதிர்கட்சிகளின் கேள்விக்கணைகளுக்கு அரசு முறையான பதில் அளிக்கவில்லை.
                                                                                                      மேலும், . . .

பாராளுமன்ற மேல்–சபையில் தமிழின் பெருமையை பேசிய பாஜக எம்.பி.க்கு ராமதாஸ் பாராட்டு

சென்னை, ஆகஸ்ட், 02-08-2014,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நாடாளுமன்ற மாநிலங்களவையில் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கான நேரத்தில் பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசியல் சீடருமான தருண் விஜய், தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் எடுத்துக் கூறியுள்ளார். உலகின் தொன்மையான மொழியான தமிழுக்கு சிறப்பு செய்ய அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பாராட்டத் தக்கவையாகும்.
பொதுவாகவே வட இந்தியாவைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைவிட சிறந்த மொழி உலகில் இல்லை என்ற எண்ணம் உண்டு. அவர்களின் செயல்களிலும், நாடாளுமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மத்திய அரசின் செயல்பாடுகளிலும் இது எதிரொலிக்கும்.
ஆனால், சமஸ்கிருதம் அதிகம் பேசப்படும் உத்தரகாண்டைச் சேர்ந்த தருண் விஜய், தமிழின் சிறப்புகளை நாடாளுமன்றத்தில் பட்டியலிட்டதுடன், திருவள்ளுவர் நாளை இந்திய மொழிகள் நாளாக அறிவிக்க வேண்டும்; வட இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் ஒரு விருப்பப்பாடமாக கற்பிக்கப்பட வேண்டும்;
                                                                                                          மேலும், . . . . 

போர் நிறுத்ததை மீறி இரண்டாவது நாளாக இஸ்ரேல் தாக்குதல்: பலி 1650 ஆக உயர்வு

ஜெருசலேம், ஆகஸ்ட், 02-08-2014,
காஸா பகுதியில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர்.
இந்த சண்டையை நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் சண்டை தொடங்கியது.
கடந்த 30-ம் தேதி இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து இடம்பெயர்ந்த சுமார் மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்திருந்த ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் நாட்டின் பீரங்கிகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.
முன்னறிவிப்பு இன்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
                                                                                                                           மேலும், . . . .

No comments:

Post a Comment