Friday 15 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-08-2014) மாலை, IST- 02.00 மணி, நிலவரப்படி,

ஏழைகள் அனைவருக்கும் வங்கி கணக்கு சுதந்திர தினவிழாவில் மோடி அறிவிப்பு
புதுடெல்லி, ஆகஸ்ட், 15–08-2014,
இந்தியாவின் 68–வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் மிகவும் உற்சாகத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் காலை 7 மணிக்கு சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காலை 7.20 மணிக்கு செங்கோட்டைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். முப்படை தளபதிகள் அறிமுகத்துக்குப் பிறகு பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதுவரை செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர்கள் எல்லோரும் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் நின்றே தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். ஆனால் பிரதமர் மோடி இன்று அத்தகைய பாதுகாப்பு கூண்டு இல்லாமல் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
முதல் தடவையாக செங்கோட்டையில் கொடி ஏற்றியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த ஒருவர் முதன் முதலாக கொடி ஏற்றி வைத்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பொதுவாகவே பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர் என்று புகழப்படுகிறார்.
ஆனால் இன்று அதையும் கடந்து அவரது சுதந்திர தின உரை உணர்ச்சிகரமான பேச்சாக இருந்தது. நாடு முன்னேற ஒவ்வொரு குடிமகனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தன் பேச்சில் மோடி வலியுறுத்தினார்.
இது பல்வேறு புதிய திட்டங்களையும் எதிர்பார்த்தபடி பிரதமர் மோடி அறிவித்தார்.
                                                                                                          மேலும், . . . . 

சென்னை கோட்டையில் ஜெயலலிதா கொடி ஏற்றினார்





சென்னை, ஆகஸ்ட், 15–08-2014,

68–வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசு சார்பில் சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலை 8.30 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார்.
8.35 மணிக்கு போர் நினைவுச் சின்னத்துக்கு வந்தார். உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அங்கிருந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை போலீசார் 15 மோட்டார் சைக்கிள் வீரர்கள் புடை சூழ கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். கோட்டை வாயில் அருகே அவரை தலைமைச் செயலாளர் மோகன்வர்கீஸ் சுங்கத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ராணுவ படைதலைவர் ஜக்பீர்சிங், தமிழ்நாடு புதுச்சேரி கடலோர காவல் படை பொறுப்பு அதிகாரி மகா தேவன், விமானப்படை அதிகாரி ரிப்பன் குப்தா, கடலோர காவல்படை கமாண்டோ சர்மா, போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை முதல்– அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் போலீசாரின் சிறப்பு அணிவகுப்பு நடந்தது. கோட்டை முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து அணி வகுப்பு மரியாதையை முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஏற்றார்.
                                                                                                         மேலும், . . . .

நெல்லையில் கலெக்டர் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயற்சி









நெல்லை, ஆகஸ்ட், 15–08-2014,
பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவையொட்டி அண்ணா விளையாட்டு மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்கு பின்பே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். விழா மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விழா தொடங்கியதும் கலெக்டர் கருணாகரன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். கொடி ஏற்றி முடித்ததும் கலெக்டர் இருக்கையில் அமர சென்றார். அப்போது திடீரென்று கூட்டத்தில் இருந்து பெட்ரோல் கேனுடன் ஒரு வாலிபர் ஓடி வந்தார். அவர் பெட்ரோலை உடலில் ஊற்றினார். பின்னர் தீப்பெட்டியை எடுத்து தீ பற்ற வைக்க முயன்றார்.
சற்றும் எதிர்பாராத இந்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட செய்தது.
                                                                                                                 மேலும், . . . .

திருப்பதியில் ஒரே நாளில் 5 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்


நகரி, ஆகஸ்ட், 15–08-2014,
ஆந்திராவில் இந்த மாதம் பல முகூர்த்த நாட்கள் இருந்தாலும் 13, 14, 15 மற்றும் 16 ஆகிய 4 நாட்கள் சிறந்த முகூர்த்த நாட்களாக தெலுங்கு மக்களால் கருதப்படுகிறது.
அதுவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதாலும், மாத சுத்த சதுர்த்தசி மற்றும் ரேவதி நட்சத்திரம் கூடி வருவதால் அதிர்ஷ்டகரமான முகூர்த்த நாளாக மக்கள் கருதுகிறார்கள்.
எனவே இன்றைய தினம் ஆந்திரா, தெலுங்கானாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடந்தது.
                                                                                           மேலும், . . . . 

அஞ்சான் - சினிமா விமர்சனம்

நடிகர் : சூர்யா
நடிகை : சமந்தா
இயக்குனர் : லிங்குசாமி
இசை : யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு : சந்தோஷ் சிவன்

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரி இடத்தில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு அறிகிறார் கிருஷ்ணா.
                                                                                                         மேலும், . . . .

No comments:

Post a Comment