Friday 8 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (08-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

பழிக்குப்பழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ உத்தரவு


ஜெருசெலம், ஆகஸ்ட், 08–08-2014,
காஸா தாக்குதலை தொடங்கியதை அடுத்து பழிக்குப்பழி வாங்க தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இஸ்ரேல் – காஸாமுனை இடையே கடந்த மாதம் 8–ந் தேதி தொடங்கிய சண்டை உக்கிரம் அடைந்தது. இந்த சண்டையில் இதுவரையில் 1,834 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இஸ்ரேலும் 64 வீரர்களையும், பொதுமக்களில் 3 பேரையும் இழந்தது. கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது உலகமெங்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது.
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று பலத்த குரல் எழுந்தது.
                                                                                             மேலும், . . . . 

2004 சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்னர் பெற்றோருடன் இணைந்தார்

ஜகர்தா, ஆகஸ்ட், 08–08-2014,
2004 சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்னர் பெற்றோருடன் இணைந்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக எழுந்த சுனாமி பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலானோர் பலியாகினார். பலர் மாயமானார்கள். காணாமல் போன அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டது. மாயமானவர்கள் திரும்பிவருவார்கள் என்று பலர் பிரார்த்தனை செய்தனர். அதில் ஒருவருக்கு பலன் கிடைத்துள்ளது.
2004 சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்னர் தன்னுடைய பெற்றோருடன் இணைந்துள்ளார்.
                                                                                                             மேலும், . . . . 

மகளிர் குழுவினரிடம் ரூ.75 கோடி மோசடி பெண்ணுக்கு போலீஸ் வலை

கோவை, ஆகஸ்ட், 08–08-2014,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி விலானூரை சேர்ந்தவர் ராணி (வயது 34). இவர் திருப்பூர் பெருமா நல்லூரில் அன்னை தெரசா மகளிர் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் மகளிர் சுய உதவிக் குழுத்தலைவிகளிடம் சென்று குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் மானியம் மற்றும் வட்டியில்லா வங்கியில் கடன் வாங்கித்தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, சேலம் உள்ளிட்ட 1800 மகளிர் சுய உதவிக் குழு விண்ணப்பித்தனர்.
சுய உதவி குழு பெண்கள் தனி நபர் கடன் பெற ரூ.30 ஆயிரம் முன் பணமாக கொடுக்க வேண்டும்.
                                                                                           மேலும், . . . . 

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சாவு பிணத்தை மீட்கும் முயற்சி நீடிக்கிறது

பெங்களூர், ஆகஸ்ட், 08–08-2014,
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூழிக்கெரே கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தா கட்டி. இவரது 6 வயது மகன் திம்மண்ணா 1–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 3–ந் தேதி மதியம் 2 மணியளவில் தனது பெரியப்பா மகனுடன் கரும்பு தோட்டத்திற்கு சென்ற சிறுவன் திம்மண்ணா, அங்கிருந்த 300 அடி ஆழ ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான்.
கிணற்றின் 160 அடி ஆழத்தில் திம்மண்ணா சிக்கி கிடந்தான்.
                                                                                                                           மேலும், . . .

No comments:

Post a Comment