Thursday 28 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-08-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

ரூ.1 லட்சம் காப்பீடு வசதி கிடைக்கும் 7½ கோடி பேருக்கு வங்கி கணக்கு திட்டம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார் ஒரே நாளில் 1½ கோடி பேர் பயன் பெற்றனர்

ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வசதியுடன் 7½ கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 1½ கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.
புதுடெல்லி, ஆகஸ்ட், 29-08-2014,
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா’ (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.
வங்கி கணக்கு திட்டம்
நாட்டில், வங்கி கணக்கு இல்லாத 7½ கோடி பேருக்கு காப்பீடு வசதியுடன் வங்கி கணக்கு தொடங்குவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் அரசு நலத்திட்டங்கள் மூலம் நேரடியாக பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது.
வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம்.கார்டு போன்ற ‘ரூபே கார்டு’ வழங்கப்படும்.
                                                                                                     மேலும், . . . 

சென்னை மண்ணிவாக்கம் முதல் நெமிலிச்சேரி வரை ரூ.1,081 கோடியில் 27 கி.மீ. நீள வெளிவட்ட சாலை திறப்பு 2-ம் கட்ட பணிகளுக்கும் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஆகஸ்ட், 29-08-2014,
மண்ணிவாக்கம் முதல் நெமிலிச்சேரி வரை ரூ.1,081 கோடியே 40 லட்சம் மதிப்பில் 27 கிலோ மீட்டர் நீள வெளிவட்ட சாலையை திறந்து வைத்ததுடன், ரூ.1,075 கோடி மதிப்பிலான 2-ம் கட்ட பணிகளுக்கும் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சாலைகள் கட்டமைப்பு
ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. சாலைக் கட்டமைப்பு வசதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் புதிய சாலைகளை அமைத்தல், புதிய பாலங் களைக் கட்டுதல், ஏற்கனவே உள்ள சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
                                                                                                  மேலும், . . . 

தலைமை செயலகத்தில் 45 நிமிடம் பேச்சு மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் ஜெயலலிதாவுடன் சந்திப்பு ‘பேச்சு பயன் உள்ளதாக இருந்ததாக’ பேட்டி

சென்னை, ஆகஸ்ட், 29-08-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடனான சந்திப்பு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது என்று மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் பேட்டி அளித்தார்.
மத்திய மந்திரி சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்துக்கு மத்திய சட்டம், நீதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று பிற்பகல் 12.27 மணிக்கு வந்தார். அங்கு அவரை தமிழக அரசு அதிகாரி அனு ஜார்ஜ் வரவேற்றார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை 12.30 மணிக்கு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் அவர்கள் பேசினர். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
மதிப்பும் மரியாதையும்
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக இங்கு வந்தேன்.
                                                                                                                    மேலும், . . . 

சதானந்த கவுடா மகனுடன் திருமணம் ஆடியோ ஆதாரங்களை நடிகை வெளியிட்டார் பரபரப்பு தகவல்

பெங்களூர், ஆகஸ்ட், 29-08-2014,
சதானந்த கவுடா மகன் மீது குற்றம்சாட்டிய நடிகை மைத்திரி கூடுதல் ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பு புகார் கூறினார்.
நடிகை மைத்திரி நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காதல்
“எனக்கும், கார்த்திக் கவுடாவுக்கும் முதலில் அவரது நண்பர் குஷால் மூலம் தான் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பிறகு, பெங்களூர் சஞ்சய்நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து இருவரும் சந்தித்து பேசினோம். பின்னர் இருவரும் நண்பர்களாக பழகினோம். கார்த்திக்கும், நானும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தோம். என்னை காதலிப்பதாக கார்த்திக் கூறினார். நானும் அவரை காதலித்தேன். என்னை கார்த்திக் உயிருக்கு உயிராக காதலித்தார்.
இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணம் செய்வதில் எந்த பிரச்சினையும் வராது என்று எண்ணினேன்
                                                                                                                மேலும், . .. . . 

No comments:

Post a Comment