Thursday 6 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தற்போதைய இடத்திலேயே புதிய கட்சியின் மாநில தலைமை அலுவலகம் செயல்படும் ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை, நவம்பர், 07-11-2014,
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தற்போதைய இடத்திலேயே புதிய கட்சியின் மாநில தலைமை அலுவலகம் செயல்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மின் கட்டண உயர்வு
தமிழகத்தில் இம்மாதம் 15-ந்தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று வெளியாகியுள்ள தகவல், தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின் கட்டணம் உயர்ந்தால், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, மின்வெட்டு இருக்கின்ற காரணத்தால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்கள் தொடங்குவதும் பாதிக்கப்பட்டு தமிழக வளர்ச்சிக்கு பெரிதும் இடையூறாக உள்ளது.
ஏற்கனவே ரெயில் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், இத்தகைய மின்கட்டண உயர்வு தேசிய கட்டண நிர்ணய கொள்கைக்கு எதிராக உள்ளது. ஆகவே, ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று தமிழக மக்களின் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜி.கே.வாசன் அளித்த பதில்களும் வருமாறு:-
                                                                                                     மேலும், . .  . .

அரசுக்கு எதிராக அணி திரளும் தொழில் நிறுவனங்கள் மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம்

சென்னை, நவம்பர், 07-11-2014,
மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, குறு, சிறு தொழில் பிரதிநிதிகள், தங்களின் கடையை பூட்டி, அதன் சாவியை அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும், மாவட்ட தொழில் மையங்களில், 8.50 லட்சம் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இந்நிறுவனங்கள், உதிரி பாகம், ஜவுளி உள்ளிட்ட, 8,000க்கும் அதிகமான, ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இதன் மூலம், 60 லட்சம் பேர், வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவுவதால், தொழிற்சாலைகளில், மின்சாரம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடுமையாக பாதிக்கப்பட்டன.
                                                                                                      மேலும், . . . 

சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம் உள்பட 13 மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை


தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம் உள்பட 13 மாவட்ட மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, நவம்பர், 07-11-2014,
ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், இலங்கைக்கு போதை பொருள் கடத்தியதாக கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை கோர்ட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்தும், இலங்கை சிறையில் தற்போது அடைக்கப்பட்டு இருக் கும் அந்த 5 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
13 மாவட்டங்களில் வேலைநிறுத்தம்
தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி நேற்று தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
                                                                                                         மேலும், . . .  ., .

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க-தி.மு.க. கவுன்சிலர்கள் மோதல் நாற்காலி, மைக்குகளை வீசி ரகளை

திண்டுக்கல், நவம்பர், 07-11-2014,
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நாற்காலி, மைக், தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன.
மாநகராட்சி கூட்டம்
திண்டுக்கல் மாநகராட்சியின் கூட்டம், மேயர் வி.மருதராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கமிஷனர் ராஜன் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் தொடக்கமாக ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி’ எடுக்கப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற விவாதம் விவரம் வருமாறு:-
                                                                                                                         மேலும், . . .  .

No comments:

Post a Comment