Monday 1 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (02-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (02-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் 13 மத்திய போலீசார் பலி ரோந்து சென்றவர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 13 மத்திய போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர், டிசம்பர்,02-12-2014,
சத்தீஷ்கார் மாநிலம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகும்.
கலெக்டர் கடத்தல்
அங்குள்ள மாவோயிஸ்டுகள், அவ்வப்போது குண்டு வெடிப்பு, துப்பாக்கி தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் வாகன அணிவகுப்பு மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அதில், முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா உள்ளிட்ட பிரமுகர்கள் குண்டு காயம் அடைந்து பலியானார்கள்.
மேலும், மற்றொரு சமயத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனனை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.
                                                                                 மேலும், . . .  .

வருமானவரி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆகிறார் 11-ந்தேதி வழக்கு முடிவுக்கு வர வாய்ப்பு

சென்னை, டிசம்பர்,02-12-2014,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, வருமானவரித்துறை தொடர்ந்துள்ள வழக்கில் இருந்து விடுதலை ஆகிறார். வருகிற டிசம்பர் 11-ந்தேதி இது தொடர்பான வழக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருமானவரி வழக்கு
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாததால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் மீது வருமானவரித்துறையினர் சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் 4 வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள் கடந்த 1996-ம் ஆண்டு தொடரப்பட்டது. கடந்த 18 ஆண்டு காலமாக நடந்து வரும் இந்த வழக்கை விரைவாக முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் சமரச தீர்வு மனு ஒன்றை வருமானவரித்துறையிடம், ஜெயலலிதாவும், சசிகலா நடராஜனும் தாக்கல் செய்தனர். இந்த சமரச மனு மீது விசாரணை நடத்த வருமானவரித்துறையின் உயர் அதிகாரிகள் 3 பேர் கொண்ட கமிட்டி வருமானவரித்துறை சார்பில் நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டி, கடந்த மாதம் 26-ந்தேதி, ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோரின் சமரச தீர்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தியது.
சமரச மனுக்கள் ஏற்பு
விசாரணையில் சமரச மனுக்களை, வருமானவரித்துறையின் கமிட்டி ஏற்றுக்கொண்டது. மேலும் வழக்கை சமரசமாக தீர்த்துக்கொள்ள,
                                                                                                              மேலும், . .  . . .

மின் உற்பத்தி திட்டங்கள் என்ற பெயரில் ஏமாற்று நாடகங்கள் அரசு மீது கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை, டிசம்பர், 02-12-2014,
மின் உற்பத்தி திட்டங்கள் என்ற பெயரில் ஏமாற்று நாடகங்கள் அரங்கேறுவதாக தமிழக அரசு மீது தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின் வாரியம் மதிப்பீடு
நடப்பு நிதியாண்டில், மின்சாரம் வாங்குவதற்கான செலவாக ரூ.27 ஆயிரத்து 147 கோடியை மின் வாரியம் மதிப்பிட்டுள்ளது. இதில் மத்திய மின் நிலையங்கள், காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள், வெளி மாநில மின் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து வாங்கும் விலையைவிட குறிப்பிட்ட 4 தனியார் மின் நிலையங்களுக்கு மட்டும் அதிகப்பட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வாரியத்துக்கு கொள்முதல் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
மத்திய மின் நிலையங்களான நெய்வேலி, கல்பாக்கம், வல்லூர், தேசிய அனல் மின் கழகத்தின் ராமகுண்டம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் இருந்து சராசரியாக ஒரு யூனிட் ரூ.2.94 மற்றும் ரூ.3.85 என்ற விலைக்கு வாங்கத் திட்டமிட்டுள்ளது.
55 சதவீதம் மின்சாரம் வாங்க செலவு
காற்றாலை, சூரிய சக்தி, உயிரி தொழில் நுட்பம் போன்ற தனியார் மின் நிலையங்களில் இருந்து ரூ.4.26-க்கும்,
                                                                                                மேலும், . . .  . .

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நாமக்கல், டிசம்பர்,02-12-2014,
எண்ணெய் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் செய்வதில் இழுபறி நீடித்து வருவதால், தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளது. இதனால் ஓரிரு நாட்களில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள்
தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என 5 மாநிலங்களில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்,
                                                                                               மேலும், . .  . . .

No comments:

Post a Comment