Thursday 4 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடக்கம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை மார்ச் 19-ல் தொடங்குகிறது

பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்குகிறது.
சென்னை, டிசம்பர், 05-12-2014,
தமிழ்நாட்டில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு
பிளஸ்-2 தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 2 ஆயிரத்து 100 மையங்கள் அமைக்கப்படுகிறது. எஸ்.எஸ். எல்.சி. தேர்வை 3 ஆயிரத்து 125 தேர்வு மையங்களில் 11 லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகளும் எழுதுகிறார்கள்.
இந்த தேர்வுகளுக்கான அதிகாரபூர்வ கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்துள்ளார்.
இதன்படி, பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 5-ந்தேதி தொடங்கி, மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.
                                                                                          மேலும், . .  . . . . 

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த, கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

சென்னை, டிசம்பர், 05-12-2014,
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று வற்புறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்
தமிழக சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்ச்சியுடன் இணை நிகழ்ச்சி நிரலாக அரசினர் தனித் தீர்மானம் ஒன்று இணைக்கப்பட்டது. அதில், தீர்மானம் ஒன்றை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் 21-ந்தேதி அதிகாலை 2 மணியளவில் 142 அடியை எட்டியது. இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதற்குக் காரணமான முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் தமிழக அரசுக்கும் இந்த மாமன்றம் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு ஏற்ப பேபி அணையை வலுப்படுத்தவும், மீதமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக கேரள அரசுக்கு தகுந்த அறிவுரைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் இந்த மாமன்றம் வற்புறுத்துகிறது.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
                                                                                                           மேலும், . . . . . 

அலுவல் ஆய்வுக் குழு முடிவு பற்றி பேச முயற்சி: சபாநாயகருடன் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம் தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளிநடப்பு

சென்னை, டிசம்பர், 05-12-2014,
அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சட்டசபையில் பேச முயற்சித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக சட்டசபையின் நேற்றைய கூட்டம், கேள்வி நேரத்துடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. 11.31 மணிக்கு கேள்வி நேரம் முடிந்ததும், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.
அப்போது, நேற்று முன்தினம் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பேச, தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் முயன்றனர். தொடர்ந்து, சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இப்படி, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று பேச முயற்சிப்பதை பார்த்த சபாநாயகர் ப.தனபால், அனைவரையும் இருக்கையில் அமரும்படி கூறினார்.
துண்டு காகிதம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள், ‘மக்கள் பிரச்சினைகள் பற்றி பேச பேரவை கூட்ட நாட்களை அதிகப்படுத்துக’ என்ற வாசகம் அடங்கிய துண்டு காகிதத்தை கையில் பிடித்தபடி எழுந்து நின்றனர்.
இதனால், அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
                                                                                                 மேலும், . . . .  .

சட்டப்பேரவையில் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் என்ன? கருணாநிதி அறிக்கை

சென்னை, டிசம்பர், 05-12-2014,
சட்டப்பேரவையில் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சந்தேகம்
தமிழகத்திலே முன்பு இருந்த முதல்-அமைச்சர் பதவி இழக்கும் நிலை ஏற்பட்டு, புதிய முதல்-அமைச்சர் பொறுப்பேற்று,
                                                                                                      மேலும், . . . .  .

No comments:

Post a Comment