Tuesday 23 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

2 மாநில சட்டசபை தேர்தல் முடிவு அறிவிப்பு ஜார்கண்டில் பா.ஜனதா வெற்றி காஷ்மீரில் 2-வது இடத்தை பிடித்தது


2 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றது. காஷ்மீர் மாநிலத்தில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இங்கு பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்தது.
புதுடெல்லி, டிசம்பர், 24-12-2014,
ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
ஓட்டுப்பதிவு அமோகம்
ஜார்கண்ட் மாநிலத்தில், நக்சலைட்டுகள் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்தனர். இதனால் அந்த மாநிலத்தில், 66 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்த மாநிலத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவு.
காஷ்மீரிலும், மக்கள் பெருந்திரளாக கூடி வந்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனால் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு 65 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஜார்கண்டில் பா. ஜனதா ஆட்சி
இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்தது.
                                                                                                                            மேலும், . . . .

100 படங்களுக்கு மேல் இயக்கிய டைரக்டர் கே.பாலசந்தர் மரணம் நினைவு திரும்பாமலே உயிர் பிரிந்தது


சென்னை, டிசம்பர், 24-12-2014,
100 படங்களுக்கு மேல் இயக்கிய டைரக்டர் கே.பாலசந்தர் நேற்று இரவு மரணமடைந்தார். நினைவு திரும்பாமலே அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 84.
கே.பாலசந்தர்
தமிழ்பட உலகில் ‘இயக்குனர் சிகரம்’ என்று பாராட்டப்பட்டவர் கே.பாலசந்தர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். என்றாலும், கடந்த 15-ந்தேதி அவருடைய நிலைமை கவலைக்கிடமானது. அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவர் தனது சுயநினைவை இழந்தார்.
மரணம்
அவருடைய உயிரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் போராடினார்கள். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 7 மணிக்கு கே.பாலசந்தர் மரணமடைந்தார்.
                                                                                              மேலும், . . . .

தாய்ப்பால் குடித்துக் கொண்டு இருந்தபோது பரிதாபம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தை மூச்சுத்திணறி சாவு ‘செவிலியர்களின் கவனக்குறைவே காரணம்’ என்று உறவினர்கள் புகார்



சென்னை, டிசம்பர், 24-12-2014,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டு இருந்த பச்சிளங்குழந்தை மூச்சுத்திணறி இறந்தது. மருத்துவமனை செவிலியர்களின் தவறான சிகிச்சையால் தான் இறப்பு ஏற்பட்டதாக கூறி குழந்தையின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ரத்த அழுத்தம்
சென்னை, சேத்துப்பட்டு 3-வது தெருவில் வசிப்பவர் சதீஷ் (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் ஷோபா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் திருமணம் ஆனது. இந்தநிலையில் ஷோபா கர்ப்பம் அடைந்தார். அவரை பிரசவத்துக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சதீஷ் சேர்த்தார்.
நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் ஷோபாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் நேற்று அதிகாலையில் ஷோபாவுக்கு ரத்த அழுத்தம் இருப்பதாக கூறி, அவரை குழந்தையுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்த டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
பச்சிளங் குழந்தை சாவு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஷோபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
                                                                                                   மேலும், . . . . 

நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிடக்கோரி பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேச்சு

சென்னை, டிசம்பர், 24-12-2014,
நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிடக்கோரி பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார்.
ஆர்ப்பாட்டம்
நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிட மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், அவரை பற்றிய அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ம.தி.மு.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மேற்கு வங்க அரசின் பள்ளி, உயர்க்கல்வி மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் துறையின் மந்திரியுமான பார்த்தா சாட்டர்ஜி, எழும்பூர் பகுதிச்செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வைகோ தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
                                                                                  மேலும், . . . .  .

No comments:

Post a Comment