Tuesday 16 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

பாகிஸ்தானில், பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் 132 பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொலை தலீபான்களின் அட்டூழியத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்
பாகிஸ்தானில், பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெஷாவர், டிசம்பர், 17-12-2014,
தலீபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூர மான மிருகவெறி தாக்குதலை நடத்தி, அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்தது, உலகையே உலுக்கி உள்ளது.
இதுபற்றிய தகவல்கள் ரத்தத்தை உறைய வைப்பதாக அமைந்துள்ளன.
தற்கொலைப்படை தீவிரவாதிகள்
பெஷாவர் நகரில், வார்சாக் ரோட்டில் ராணுவ பப்ளிக் பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் ஒரு மயானமும் உள்ளது. அந்த மயானத்தின் வழியாக, ராணுவ சீருடை அணிந்த, அரபி மொழி பேசிய 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள், ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் புகுந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு புகுந்த அவர்கள், மறுநிமிடமே இலக்கின்றி, ஈவிரக்கமின்றி அப்பாவி மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்கள்.
ஒவ்வொரு வகுப்புக்கும் அவர்கள் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். தொடர் துப்பாக்கிச்சூடு காரணமாக அந்த பகுதியே அதிர்ந்தது.
                                                                                                             மேலும், . . . . .

சகாயத்திற்கு கொலை மிரட்டல் கடிதம் “உடனே மதுரையை விட்டு வெளியேறாவிட்டால் உயிருடன் திரும்பமுடியாது”


மதுரை, டிசம்பர், 17-12-2014,
கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதில், “உடனே மதுரையை விட்டு வெளியேறாவிட்டால் உயிருடன் திரும்ப முடியாது” என்று கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சகாயம் விசாரணை
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த 4-ந்தேதி அவர் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அறையில் முதல் கட்ட விசாரணையை தொடங் கினார். அவரிடம் பொதுமக்கள் பலர் புகார் மனுக்களை கொடுத்தனர். மேலும் அவர் கிரானைட் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தபாலில் மதுரை, சென்னை முகவரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து தபால் மூலமும் பலர் தங்கள் புகார் மனுக்களை அனுப்பி வைத்தனர்.
                                                                                                         மேலும், . . . . . 

இந்தியா-பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி சென்னை போர் நினைவுச்சின்னத்தில் அணிவகுப்பு மரியாதை

சென்னை, டிசம்பர், 17-12-2014,
இந்தியா-பாகிஸ்தான் போரில் மறைந்த இந்திய படை வீரர்களுக்கு சென்னை போர் நினைவுச்சின்னத்தில் முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.
‘விஜய் திவஸ்’
1971-ம் ஆண்டு மேற்கு பாகிஸ்தானுக்கும், கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்காளதேசம்) மற்றும் இந்தியாவுக்கும் இடையில் போர் நடந்தது. இப்போரில் இந்தியாவும், கிழக்கு பாகிஸ்தான் ராணுவமும் வெற்றிபெற்று வங்காளதேசம் தனி நாடாக உருவாக்கப்பட்டது.
பாகிஸ்தான் வசம் இருந்த வங்காளதேசம் விடுதலை பெற்றதால் வங்காளதேச விடுதலைபோர் என்றும் இப்போர் அழைக்கப்படுகிறது.
                                                                                                   மேலும், . . .  .

வெளி மாநில மது விற்பனை, தண்ணீர் கலந்த மது விற்பனை: முறைகேடுகளில் ஈடுபடும் ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் பணி நீக்கம் மேலாண்மை இயக்குநர் எச்சரிக்கை

சென்னை, டிச.17-
‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை கடைகளில், வெளி மாநில மது மற்றும் தண்ணீர் கலந்த மதுவை விற்பனை செய்யும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என மேலாண்மை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தா.சவுண்டையா அளித்த பேட்டியின் கேள்வி, பதில் விவரம் வருமாறு:-
நிரந்தர அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்...
கேள்வி: பணி நிரந்தரம் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார்களா?
பதில்: பணி நிரந்தரம் என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதில், நிர்வாகம் சார்பில், எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடம் இல்லை.
கேள்வி: ‘டாஸ்மாக்’ பணியாளர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக குறை கூறுகின்றனரே?
                                                                                              மேலும், . .  . . . 

No comments:

Post a Comment