Tuesday 2 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

2-வது கட்ட தேர்தல் காஷ்மீரில் மீண்டும் 71 சதவீத ஓட்டுப்பதிவு ஜார்கண்டில் 65 சதவீதம் பதிவானது

ஸ்ரீநகர், டிசம்பர், 03-12-2014,
காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டசபைக்கான 2-வது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. முதல் கட்ட தேர்தலைப் போலவே காஷ்மீரில் வரலாறு காணாத வகையில் மீண்டும் 71 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஜார்கண்டில் 65 சதவீத வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்.
2-வது கட்ட தேர்தல்
87 தொகுதிகளைக் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கும், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
இதில் முதல் கட்டமாக கடந்த 25-ந்தேதி ஓட்டுப் பதிவு நடந்தது. அப்போது காஷ்மீரில் 15 தொகுதிகளிலும், ஜார்கண்டில் 13 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2-வது கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில் காஷ்மீரில் 18 தொகுதிகளுக்கும், ஜார்கண்டில் 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
                                                                                                    மேலும், . . .  .

தென் மாநிலங்களில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம்: சென்னை மையத்தில் ரூ.1¾ லட்சம் கோடி பண பரிவர்த்தனை முடக்கம் 2½ கோடி காசோலைகள் தேக்கம்


சென்னை, டிசம்பர், 03-12-2014,
தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக, சென்னை மையத்தில் 1¾ லட்சம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனை முடங்கியது. 2½ கோடி காசோலைகள் தேக்கம் அடைந்தன.
10 அம்ச கோரிக்கைகள்
வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் 12-ந் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாவிட்டால், நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரித்து, தொடர் வேலை நிறுத்தத்திற்கு அரைகூவல் விடுவது என்றும், அதன்பிறகும் ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்திருந்தனர்.
வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு விடுத்திருந்த தொடர் வேலை நிறுத்தத்தையொட்டி, முதல் கட்ட வேலை நிறுத்த போராட்டம் தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 ஆண்டுகளாகநிறைவேற்றப்படவில்லை
ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.எம்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சி.எச்.வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                                        மேலும், . . . . 

மதுரவாயல் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியை கன்னத்தில் அறைந்த பிளஸ்-2 மாணவன் ஆசிரியைக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை


பூந்தமல்லி, டிசம்பர், 03-12-2014,
மதுரவாயலில் ஆசிரியை கன்னத்தில் அறைந்த பிளஸ்-2 மாணவனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கம்ப்யூட்டர் ஆசிரியை
மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சென்னை புளியந்தோப்பு. வ.உ.சி. தெருவைச் சேர்ந்த லட்சுமி (வயது 38) என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்றுமுன்தினம் மாலை பிளஸ்-2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பு நடத்திக் கொண்டு இருந்தார்.
                                                                                                        மேலும், . . .  . .

திருவொற்றியூரில் பயங்கரம் கள்ளக்காதலியை கண்டித்த மனைவி எரித்துக்கொலை? கணவர் கைது

திருவொற்றியூர், டிசம்பர், 03-12-2014,
திருவொற்றியூரில் கள்ளக் காதலியை கண்டித்த மனைவியை அவரது கணவரே எரித்துக் கொலைசெய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்காதல்
திருவொற்றியூர் ராஜாஜிநகர் நேரு தெருவில் வசித்து வருபவர் மதன். செங்கல், மணல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. லிங்கம் (வயது 9) என்ற மகனும், தனுஷ் என்ற 5 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
இந்தநிலையில் மதனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
                                                                                                               மேலும், . . .  . 

No comments:

Post a Comment