Saturday 27 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

புதிய ஆதாரம் அம்பலம் எதிரொலி கராச்சி நகரில் வசிக்கும் தாவூத் இப்ராகிமை ‘இந்தியாவிடம் ஒப்படையுங்கள்’ மத்திய அரசு வற்புறுத்தல்

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசிப்பதற்கான புதிய ஆதாரம் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி, டிசம்பர், 28-12-2014,
1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி மும்பை நகரில் அடுத்தடுத்து 13 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
தாவூத் இப்ராகிம்
இந்த குண்டுவெடிப்புகளில் 350 பேர் பலியானார்கள். 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இந்திய அரசு பல முறை பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது. அதற்கான ஆதாரங்களையும் வழங்கியது.
ஆனால் பாகிஸ்தான் அதை பொருட்படுத்தவில்லை. தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
                                                                                                                   மேலும், . . . . 

அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

சென்னை, டிசம்பர், 28-12-2014,
அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
போக்குவரத்து தொழிலாளர்கள்
சென்னையில் கடந்த 22-ந்தேதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் 11 தொழிற்சங்கங் களின் (அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து) பேரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ந்தேதி(நாளை) வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களிடம் அரசு சமரச பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது.
                                                                                                  மேலும்,. . . . . 

அரசியல் பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் பயங்கர கலவரம்; துப்பாக்கி சூடு கல்வீச்சில் தேனி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 பேர் காயம்


தேனி, டிசம்பர், 28-12-2014,
தேனியில் அரசியல் பிரமுகரின் இறுதி ஊர்வலத்தில் பயங்கர கலவரம் ஏற்பட்டு, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். கலவரக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.
மாவட்ட பொதுச்செயலாளர்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தவர் எஸ்.ஆர்.தமிழன் (வயது 37). இவரது தந்தை செவ்வாழை ராசு, பருத்திவீரன் உள்பட பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
சமீபத்தில் இவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து மாநில பொதுச்செயலாளர் கதிரவன் எம்.எல்.ஏ. அறிவித்தார். எஸ்.ஆர்.தமிழன் பெங்களூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு தேர்வு எழுதுவதற்காக சென்றிருந்தார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது நேற்று முன்தினம் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார்.
பஸ் மீது கல்வீச்சு
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
                                                                                                மேலும், . . . . . 

மேலூர்-திருப்பத்தூர் சாலையில் உள்ள ‘பொக்கிஷமலை’யில் அதிக அளவு முறைகேடுகள் சகாயம் பார்வையிட்டார்

மேலூர், டிசம்பர், 28-12-2014,
மேலூர்-திருப்பத்தூர் சாலையில் உள்ள பொக்கிஷமலையில் அதிக அளவு முறைகேடு நடந்திருப்பதாக, சகாயம் ஆய்வில் கண்டுபிடித்தார்.
முறைகேடுகள்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து ஐகோர்ட்டு உத்தரவின் படி சகாயம் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று காலையில் மேலூர்-திருப்பத்தூர் சாலையில் கீழவளவு பகுதி மலைப்பகுதியில் நடந்துள்ள கிரானைட் முறைகேடுகள் பற்றி சகாயம் விசாரணை நடத்தினார்.
                                                                                                        மேலும், . . . . .

No comments:

Post a Comment