Thursday 18 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜாமீன் 4 மாதம் நீடிப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு நீடித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. மேலும், அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு தனி அமர்வை நியமித்து, விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி, டிசம்பர், 19-12-2014,
பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ,100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
கர்நாடக ஐகோர்ட்டில் மனு
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட் டில் மனு தாக்கல் செய்தனர்.
                                                                                                                      மேலும், . . .  .

அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகள் பெற்றோருடன் கடலில் குதித்ததில் 3 பேர் சாவு; 4 பேர் மீட்பு ஆசிரம நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்


புதுச்சேரி, டிசம்பர், 19-12-2014,
அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகள், அவர்களது பெற்றோருடன் கடலில் குதித்ததில் 3 பேர் இறந்தனர். 4 பேர் மீட்கப்பட்டனர். ஆசிரம நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
அரவிந்தர் ஆசிரமம்
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வாழைக்குளம் பகுதியில் உள்ளது. இங்கு பீகாரை சேர்ந்த சகோதரிகளான ஜெயஸ்ரீ(வயது 54), அருணா(52), ராஜஸ்ரீ(49), நிவேதிதா(48), ஹேமலதா(39) ஆகியோர் தங்கி ஆசிரமத்திற்கு சேவை செய்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் ஆசிரம நிர்வாகத்தினர் சிலர் மீது போலீசில் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் செய்தனர்.
விதிமுறைகளை மீறியதாக 5 பேரையும் குடியிருப்பில் இருந்து வெளியேற ஆசிரம நிர்வாகம் உத்தரவிட்டது. அவர்கள் வெளியேற மறுத்ததால் ஆசிரமம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பை பெற்றது. 5 சகோதரிகளும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததில், அவர்கள் குடியிருப்புகளை காலி செய்ய 6 மாதம் அவகாசம் அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
தற்கொலை முடிவு
காலஅவகாசம் முடிந்தும் குடியிருப்பை காலி செய்யாததால் ஆசிரம நிர்வாகம் போலீஸ் மூலம் அவர்களை வெளியேற்ற முயற்சித்தது.
                                                                                                                       மேலும், . .  . . .  . 

அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் சோதனை வெற்றி விண்கலம், திட்டமிட்டபடி பத்திரமாக பூமிக்கு திரும்பியது

ஸ்ரீஹரிகோட்டா, டிசம்பர், 19-12-2014,
மனிதனை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்யும் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்வதற்காக அடுத்ததலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் புறப்பட்டு 20-வது நிமிடத்தில் அதில் இருந்த விண்கலம் திட்டமிட்டபடி பூமியை வந்தடைந்தது.
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முதன் முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்வதற்காக அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் வடிவமைத்து இருந்தனர்.
இந்த ராக்கெட்டின் மேல்பகுதியில், 3 மனிதர்களை பத்திரமாக விண்ணுக்கு அனுப்பி மீண்டும், பூமிக்கு அழைத்து வரும் வகையில் 3,775 கிலோ எடை கொண்ட ‘கப் கேக்’
                                                                                            மேலும், .  . . .

கிரானைட் குவாரிகளில் சகாயம் நேரில் ஆய்வு கண்மாய்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார்

மேலூர், டிசம்பர், 19-12-2014,
மேலூர் பகுதியில் கிரானைட் குவாரிகளில் நேற்று நேரடி ஆய்வு மேற்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் பொதுமக்கள் சரமாரி புகார் அளித்தனர். கண்மாய், குளங்கள், பாதைகளை ஆக்கிரமித்து கிரானைட் குவாரிகள் அமைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
விசாரணை
மதுரை மாவட்டத்தில் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றதாக கூறப்படும் கிரானைட் குவாரி முறைகேடுகள் தொடர்பாக, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த 15-ந் தேதி 2-வது கட்ட விசாரணையை தொடங்கிய அவர், நேற்று காலை 10 மணி அளவில் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் பகுதிக்கு தனது குழுவினருடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். பின்னர் ஓவாமலை என அழைக்கப்படும் ஓதுவார்மலை மீது ஏறிய சகாயம், அங்கு 3-ம் நூற்றாண்டு கால பழமையான பிராம்மி தமிழ் எழுத்து கல்வெட்டுக்களையும், சமணத் துறவிகள் வசித்த கல்வெட்டு படுகைகளையும் பார்வையிட்டார்.
அப்போது தொல்லியல் துறை வரலாற்று சின்னங்கள் உள்ள இந்த இடத்தின் அருகே எத்தனை மீட்டர் தூரத்தில் கிரானைட் குவாரிகள் அமைந்துள்ளன?
                                                                                                                 மேலும், .  . . . .

No comments:

Post a Comment